இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் 1989லும், 1998ம் ஆண்டிலும் நடந்த பொதுத் தேர்தலில் ஆந்திராவின் அனகபள்ளித் தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி வேட்பாளர் கொனதல ராமகிருஷ்ணாவும், பிகாரின் ராஜ்மஹால் தொகுதியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் சோம் மராண்டியும் எத்தனை வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்கள் என்று நீங்கள் அறிந்தால் நிச்சயம் ஆச்சரியப்படுவீர்கள். இரண்டு இலக்க எண் வித்தியாசத்தில் கூட இல்லை.. ஆம் வெறும் 9 வாக்குகள் வித்தியாசத்தில் தான் வெற்றி பெற்று நாடாளுமன்றத்துக்குள் நுழைந்திருக்கிறார்கள்.