ராஜஸ்தானுக்கு எதிரான ஐபிஎல் ஆட்டத்தில் ஹைதராபாத் அணி முதலில் பந்துவீச்சுடெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!மக்கள் எதிர்பார்த்த விடுதலை மே 4-ல் கிடைக்கும்: நிர்மல் குமார்அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்குதிமுகவே மீண்டும் ஆட்சி; விஜய்யால் அரசியல் சூழல் மாறும்: திருமாவளவன்நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு எப்போது? என்டிஏ அறிவிப்பு
/

ராகுல் முன்னிலையில் காங்கிரசில் இணைந்த பாஜக தலித் பெண் எம்.பி 

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி முன்னிலையில் உத்தர பிரதேச மாநில பாஜக தலித் பெண் எம்.பி ஒருவர் தன்னை காங்கிரசில் இணைதுக் கொண்டுள்ளார்.

News image
Updated On :3 மார்ச் 2019, 6:52 am

லக்னௌ: காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி முன்னிலையில் உத்தர பிரதேச மாநில பாஜக தலித் பெண் எம்.பி ஒருவர் தன்னை காங்கிரசில் இணைதுக் கொண்டுள்ளார்.

உத்தர பிரதேச மாநிலம் பஹாரியாச் தொகுதியிலிருந்து பாஜக சார்பில் கடந்த 2014-ம் ஆண்டு போட்டியிட்டு எம்.பி.யாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் சாவித்ரி புலே. ஆனால், கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்திலிருந்து இவர் பாஜக தலைமையைக் கடுமையாக விமர்சித்து வந்தார்.

தலித் சமூகத்தைக் சேர்ந்தவரான இவர் பாஜகவில் தலித்துகளுக்கு மதிப்பில்லை, என்று தொடர்ந்து குற்றம் சாட்டி வந்தார். இந்நிலையில், கட்சித் தலைமையின் மீது அதிருப்தி அடைந்த சாவித்ரி புலே காங்கிரஸ் கட்சியில் சனிக்கிழமையன்று தன்னை இணைத்துக் கொண்டுள்ளார்.

அதேபோல கடந்த 2009-ம் ஆண்டு பதேபூர் தொகுதியின் எம்.பி.யாக இருந்த ராகேஷ் சச்சனும் தற்போது காங்கிரஸ்  கட்சியில் இணைந்தார். இவர் முலாயம் சிங் மற்றும் அகிலேஷ் ஆகிய இருவர் அரசிலும் எம்.எல்ஏ.வாக இருந்தவர்.

பகுஜன் சமாஜ் கட்சியுடன், சமாஜ்வாதிக் கட்சி தற்போது கூட்டணி அமைந்துள்ளது. பதேபூர் தொகுதி, பகுஜன் சமாஜ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. இதனால், அதிருப்தி அடைந்த ராகேஷ் சனியன்று காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார்.

இவர்கள் இருவரும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, உத்தர பிரதேச கிழக்குப் பகுதி  காங்கிரஸ் பொதுச் செயலாளாரான பிரியங்கா காந்தி ஆகிய இருவர் முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.

உ.பி.யில் கிழக்குப் பகுதியில் பாஜக மற்றும் சமாஜ்வாதிக் கட்சிகளைச் சேர்ந்த இரண்டு முக்கிய தலைவர்கள் காங்கிரஸ் கட்சியில் இணைந்தது அந்த கட்சிக்கு வலுவூட்டுவதாக இருக்கும் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.