அமராவதி: தெலுங்கு தேசம் கட்சித் தலைவரும் ஆந்திர முன்னாள் முதல்வருமான சந்திரபாபு நாயுடு கட்டிய கூட்ட அரங்கை இடிக்க மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.
ஆந்திர முன்னாள் முதல்வரான சந்திரபாபு நாயுடுவின் ஆட்சிக்கு காலத்தில் அவரது அதிகாரப்பூர்வ இல்லம் உண்டவல்லி என்னும் இடத்தில அமைந்திருந்தது. அதன் அருகிலேயே அதன் தொடர்ச்சியாக ஒரு மாபெரும் கூட்ட அரங்கை சந்திரபாபு நாயுடு காட்டினார். அதற்கு 'பிரஜா வேதிகா' என்று பெயரிடப்பட்டது. அங்கு அரசு தொடர்பான கூட்டங்கள் நடத்தப்பட்டு வந்தன.
இந்நிலையில் சந்திரபாபு நாயுடு கட்டிய 'பிரஜா வேதிகா' கூட்ட அரங்கை இடிக்க மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி திங்களன்று உத்தரவிட்டுள்ளார்.
ஆந்திரா மாநிலத்தில் உள்ள மாவட்ட ஆட்சித் தலைவர்களின் மாநாடு அதே கூட்ட அரங்கில் திங்களன்று நடைபெற்றது. அந்த மாநாட்டிலேயே ஜெகன்மோகன் ரெட்டி இந்த முடிவை அறிவித்தார்.
'பிரஜா வேதிகா' கட்டடமானது சட்ட விதிகளை மீறி கட்டப்பட்டு உள்ளதாகத் தெரிவித்த ஜெகன்மோகன் ரெட்டி, ஆந்திராவில் கட்டப்பட்டுள்ள சட்டவிரோத கட்டடங்களுக்கு எதிரான தனது நடவடிக்கை இந்த 'பிரஜா வேதிகா' கூட்ட அரங்கில் இருந்து தொடங்குவதாக அறிவித்தார்.
அவரது இந்த நடவடிக்கையானது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று தெலுங்கு தேசம் கட்சி விமரிசித்துள்ளது. அக்கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு விடுமுறையைக் கொண்டாட தற்போது குடும்பத்துடன் வெளிநாட்டில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பயங்கரவாதிகளுக்கு பிரியாணி கொடுக்கிறது காங்கிரஸ், திரிணமூல் : அமித் ஷா
கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிராக லக்னௌ பந்துவீச்சு!

ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் வங்கியின் 4வது காலாண்டு லாபம் 5% உயர்வு!

குறைந்தபட்ச ஊதியம் ரூ. 69,000 வழங்க வேண்டும்: 8-வது ஊதியக் குழுவுக்கு ஊழியர் சங்கங்கள் கோரிக்கை!
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


