புது தில்லி: காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு இன்று பிறந்தநாள். மக்களவைத் தேர்தல் தோல்வியின் எதிரொலி காரணமாக, ராகுல் தனது பிறந்தநாளை அவ்வளவு பெரிதாகக் கொண்டாட வாய்ப்பில்லை என்றே கருதப்படுகிறது.
1970ம் ஆண்டு பிறந்த காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுலுக்கு இன்று பிறந்தநாள் என்பதால் கட்சித் தலைவர்கள் மற்றும் கட்சித் தொண்டர்களின் வாழ்த்துகளைப் பெற புது தில்லியில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்துக்கு வந்திருந்தார் ராகுல்.
அங்கு அவரைச் சந்திக்கக் காத்திருந்த பத்திரிகையாளர்களுக்கு இனிப்புக் கொடுத்து ராகுல் காந்தி மகிழ்ந்தார். பத்திரிகையாளர்களும் பிறந்தநாள் வாழ்த்துகளை ராகுலுக்கு தெரிவித்துக் கொண்டனர்.
முன்னதாக, பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுலுக்கு டிவிட்டர் மூலம் பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!
அரசன் குழுவுடன் பிறந்த நாளைக் கொண்டாடிய சமுத்திரக்கனி!

தெலங்கானாவில் சார்மினார் எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டியில் திடீர் புகை!
திமுக கூட்டணிக்கு பிரகாசமான வெற்றி வாய்ப்பு: சு. வெங்கடேசன் எம்.பி.
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


