டிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைதுசென்னை திரும்பும் மக்கள்: இரு நாள்களுக்கு போக்குவரத்து மாற்றம்சீனா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைதமிழகம், மேற்கு வங்கத்தில் மறுவாக்குப்பதிவு இல்லை: தோ்தல் ஆணையம் 20 ஆண்டுகளுக்குப் பிறகு காஸாவில் தோ்தல்!தாழ்த்தப்பட்டோருக்கு 15% உள்ஒதுக்கீடு அளிக்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்: பாஜக கடும் விமா்சனம்
/

வாயு புயல்: பாதுகாப்பான இடத்துக்கு மக்களை கொண்டு செல்லும் பணியை துவக்கியது குஜராத் அரசு

அரபிக் கடலில் உருவான வாயு புயல் குஜராத்தில் நாளை காலை கரையைக் கடக்கும் என்பதால், கடற்கரையோரப் பகுதிகளில் வாழும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்குக் கொண்டு செல்லும் பணி துவங்கியது.

News image
Updated On :12 ஜூன் 2019, 10:02 am

அகமதாபாத்: அரபிக் கடலில் உருவான வாயு புயல் குஜராத்தில் நாளை காலை கரையைக் கடக்கும் என்பதால், கடற்கரையோரப் பகுதிகளில் வாழும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்குக் கொண்டு செல்லும் பணி துவங்கியது.

சௌராஷ்டிரா, கட்ச் ஆகிய பகுதிகளில் வெள்ளம் ஏற்பட வாய்ப்பிருக்கும் இடங்களில் இருந்து சுமார் 3 லட்சம் மக்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.

வாயு புயலானது அதி தீவிர புயலாக மாறி நாளை காலை வெரவால் பகுதிக்கு அருகே கரையைக் கடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அப்போது மணிக்கு 145 முதல் 155 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக் கூடும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

குஜராத்தின் கட்ச், மோர்பி, ஜாம்நகர், துவாரகா, போர்பந்தர், ராஜ்கோட், அம்ரேலி, பாவ்நகர் உள்ளிட்ட மாவட்டங்களில் வாயு புயல் தாக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த 10 மாவட்டங்களில் தாழ்வான பகுதிகளில் வாழும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்ந்து வருகிறார்கள்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.