டிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைதுசென்னை திரும்பும் மக்கள்: இரு நாள்களுக்கு போக்குவரத்து மாற்றம்சீனா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைதமிழகம், மேற்கு வங்கத்தில் மறுவாக்குப்பதிவு இல்லை: தோ்தல் ஆணையம் 20 ஆண்டுகளுக்குப் பிறகு காஸாவில் தோ்தல்!தாழ்த்தப்பட்டோருக்கு 15% உள்ஒதுக்கீடு அளிக்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்: பாஜக கடும் விமா்சனம்
/

பெங்களூரு நகைக் கடை உரிமையாளர் அரபு நாட்டில் தஞ்சம்?

பெங்களூருவில் தற்கொலை செய்துகொள்வதாக ஒலிப்பேழையை வெளியிட்டு ஆபரண மாளிகை உரிமையாளர் தலைமறைவானதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

News image
Updated On :11 ஜூன் 2019, 7:34 am


பெங்களூருவில் தற்கொலை செய்துகொள்வதாக ஒலிப்பேழையை வெளியிட்டு ஆபரண மாளிகை உரிமையாளர் தலைமறைவானதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பெங்களூரு சிவாஜிநகர், ஜெயநகரில் தனியார் ஆபரண மாளிகை நடத்தி வருபவர் மன்சூர்கான். இவர் தான் தற்கொலை செய்துகொள்ளப் போவதாக, மாநகர காவல் ஆணையருக்கு ஒலிப்பேழையை அனுப்பி வைத்துவிட்டு தலைமறைவானதாகக் கூறப்படுகிறது. 

அதே சமயம், பெங்களூரு காவல்துறையைச் சேர்ந்த அடையாளம் கூற விரும்பாத அதிகாரி ஒருவர் அளித்திருக்கும் தகவலில், மன்சூர்கான் ஐக்கிய அரபு நாடுகளுக்கு ஜூன் 8ம் தேதியே தப்பிச் சென்றுவிட்டதாகத் தெரிவித்துள்ளார்.

அவர் மீது ஏராளமான புகார்கள் வந்துள்ளன. அதன் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க திட்டமிட்டிருந்தது அவருக்கு எப்படியோ தெரிந்து அவர் நாட்டை விட்டு வெளியேறிவிட்டார் என்றும் அவர் கூறினார்.


முனன்தாக மன்சூர் கான் வெளியிட்ட ஆடியோவில் (ஒலிப்பேழை) கூறியிருப்பதாவது:-
 போலீஸ் அதிகாரிகள், அரசியல்வாதிகளுக்கு பணம் கொடுத்துள்ளேன். கடந்த 10 ஆண்டுகளாக ஆபரண வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள நான், இதனால் பெரும் நஷ்டத்துக்கு உள்ளாக நேர்ந்தது. என்னை நம்பிய பலர், ஆபரண மாளிகையில் முதலீடு செய்துள்ளனர். அரசியல்வாதிகள் கொடுக்கும் தொந்தரவால்,  நான் வாழ்ந்தது போதுமென்றாகியுள்ளது. இதனால் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்துள்ளேன்'  என தெரிவித்துள்ளார்.

வாடிக்கையாளர்கள் போராட்டம்: இதையறிந்த வாடிக்கையாளர்கள் ஆபரண மாளிகைகளின் முன்பு திங்கள்கிழமை திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.  அப்போது,  தங்களின் முதலீட்டை திரும்பப் பெற்றுதருமாறு வாடிக்கையாளர்கள் போலீஸாரிடம் வலியுறுத்தி புகார் தெரிவித்தனர். 

இந்த நிலையில், ஒலிப்பேழையில் சிவாஜிநகர் எம்எல்ஏ ரோஷன் பெய்க்கின் பெயரை குறிப்பிட்டுள்ளதாகத் தகவல்கள் பரவின. இதை ரோஷன்பெய்க் மறுத்துள்ளார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.