டிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைதுசென்னை திரும்பும் மக்கள்: இரு நாள்களுக்கு போக்குவரத்து மாற்றம்சீனா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைதமிழகம், மேற்கு வங்கத்தில் மறுவாக்குப்பதிவு இல்லை: தோ்தல் ஆணையம் 20 ஆண்டுகளுக்குப் பிறகு காஸாவில் தோ்தல்!தாழ்த்தப்பட்டோருக்கு 15% உள்ஒதுக்கீடு அளிக்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்: பாஜக கடும் விமா்சனம்
/

தண்ணீர் இல்லாததால் கல்யாணத்துக்கு பொண்ணும் இல்லை: ஆந்திர கிராமத்தினர் சந்திக்கும் விநோத பிரச்னை

கடந்த பல ஆண்டுகளாக ஆந்திர மாநிலம் சீதாநகரம், தண்ணீர் பிரச்னை தலைவிரித்தாடும் கிராமம் என்ற வகையில் மிகப் பிரபலம். 

News image
Updated On :10 ஜூன் 2019, 12:32 pm


ஸ்ரீகாகுளம்: கடந்த பல ஆண்டுகளாக ஆந்திர மாநிலம் சீதாநகரம், தண்ணீர் பிரச்னை தலைவிரித்தாடும் கிராமம் என்ற வகையில் மிகப் பிரபலம். 

தண்ணீர் பிரச்னை என்றால், குடிநீர் மற்றும் அடிப்படைத் தேவைகளுக்கு தண்ணீர் கிடைப்பதில் மட்டும் சிக்கல் ஏற்படுவதோடு பிரச்னை நின்றுவிடுவதில்லை.

இந்த கிராம மக்களுக்கு தண்ணீர் மூலமாக ஏராளமான பிரச்னைகள் ஏற்பட்டுள்ன. அதில் ஒன்று, இந்த கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்களுக்கு அருகில் இருக்கும் கிராமத்தைச் சேர்ந்த குடும்பத்தினர் பெண் கொடுக்க மறுத்துவிடுகின்றனர்.

தண்ணீர் இல்லாத கிராமத்தில் தங்கள் வீட்டுப் பெண் கஷ்டப்படக் கூடாது என்பதற்காக, சீதாநகர கிராம இளைஞர்களுக்கு திருமணம் ஆவதில் சிக்கல் ஏற்படுகிறது.

இங்கு நிலத்தடி நீர் உவர்ப்பாக உள்ளதால்,கிராமத்தில் இருந்து 4 கி.மீ. தொலைடிவல் போர்வெல் போட்டு ஒரே ஒரு டேங்கில் தண்ணீர் நிரப்பி கிராம மக்களுக்கு வழங்கப்படுகிறது. அப்படியும் ஒரு குடும்பத்துக்கு இரண்டு குடம் தண்ணீரே கிடைக்கிறது.

ஏழைக் குடும்பமாக இருந்தாலும் உண்ண உணவில்லாமல் போனாலும், இந்த கிராம மக்கள் தண்ணீர் கேன்களை வாங்கித்தான் குடிக்கப் பயன்படுத்துகிறார்கள். 

தண்ணீர் இல்லாமல் சில நேரங்களில் குளிப்பதைக் கூட தள்ளிப்போடுகிறோம். குடிக்க மட்டுமே தண்ணீர் வாங்க முடிகிறது. சமைக்க உவர்ப்பு தண்ணீரையே பயன்படுத்துகிறோம் என்கிறார் கல்லூரி மாணவர் குமார்.

இவ்வளவு பிரச்னை இருக்கும் கிராமத்தில் இளைஞர்களுக்கு திருமணம் ஆவதில் சிக்கல் வேறு. அந்த கிராமத்தைச் சேர்ந்த மக்களும் தங்களது பெண் பிள்ளைகளை தண்ணீர் பிரச்னை இல்லாத வேறு கிராமங்களில் தான் கட்டிக் கொடுக்க விரும்புகிறார்கள்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.