8 அமைச்சரவைக் குழு மாற்றியமைப்பு: அனைத்திலும் அமித் ஷா
பாதுகாப்பு, பொருளாதார வளர்ச்சி, வேலைவாய்ப்பு உட்பட முக்கியமான 8 அமைச்சரவைக் குழுவை மத்திய அரசு நேற்று (புதன்கிழமை) மாற்றியமைத்தது.


பாதுகாப்பு, பொருளாதார வளர்ச்சி, வேலைவாய்ப்பு உட்பட முக்கியமான 8 அமைச்சரவைக் குழுவை மத்திய அரசு நேற்று (புதன்கிழமை) மாற்றியமைத்தது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சி அமைத்தது. இதையடுத்து, பிரதமர் மோடி உட்பட மத்திய அமைச்சர்கள் கடந்த மாதம் 30-ஆம் தேதி பதவியேற்றுக் கொண்டனர்.
இந்த நிலையில், இந்தியப் பொருளாதார வளர்ச்சி 5.8 சதவீதமாக சரிந்தது, வேலைவாய்ப்பின்மை கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத வகையில், 6.1 சதவீதமாக உள்ளது ஆகியவற்றை குறிப்பிட்டு எதிர்க்கட்சிகள் கடுமையான விமரிசித்து வந்தன. இது, பாஜக அரசுக்கு கடும் சவாலாக உள்ளது.
இதையடுத்து, பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு பாதுகாப்பு, முதலீடு மற்றும் பொருளாதார வளர்ச்சி, வேலைவாய்ப்பு மற்றும் திறன் மேம்பாடு, வீட்டு வசதி, பொருளாதார விவகாரம், நாடாளுமன்ற விவகாரம், அரசியல் விவகாரம், அமைச்சரவை நியமனக் குழு ஆகிய 8 அமைச்சரவைக் குழுவை நேற்று மாற்றியமைத்தது.
இந்த 8 அமைச்சரவைக் குழுவிலும் உள்துறை அமைச்சர் அமித் ஷா இடம்பெற்றுள்ளனர். பிரதமர் மோடி நாடாளுமன்ற விவகாரம் மற்றும் வீட்டு வசதி அமைச்சரவைக் குழு தவரித்து மீதமுள்ள 6 அமைச்சரவைக் குழுவில் இடம்பெற்றுள்ளார். இதில், வேலைவாய்ப்பு மற்றும் திறன் மேம்பாடுக்கான அமைச்சரவைக் குழு, முதலீடு மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கான அமைச்சரவைக் குழு ஆகிய இரண்டு அமைச்சரவைக் குழுவுக்கு பிரதமர் மோடியே தலைமை வகிக்கிறார். ஸ்மிருதி இராணி எந்த அமைச்சரவைக் குழுவிலும் இடம்பெறவில்லை. ஆனால், வேலைவாய்ப்பு மற்றும் திறன் மேம்பாட்டு அமைச்சரவைக் குழுவில் மட்டும் அவர் சிறப்பு அழைப்பாளராக உள்ளார்.
அமைச்சரவை நியமனக் குழுவில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகிய இருவர் மட்டுமே இடம்பெற்றுள்ளனர்.
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வீட்டு வசதி, பொருளாதார விவகாரம், நாடாளுமன்ற விவகாரம், அரசியல் விவகாரம், பாதுகாப்பு, முதலீடு மற்றும் பொருதாளர வளர்ச்சி, வேலைவாய்ப்பு மற்றும் திறன் மேம்பாடு ஆகிய அமைச்சரவைக் குழுவில் இடம்பெற்றுள்ளார்.
பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பாதுகாப்பு மற்றும் பொருளாதார விவகாரம் என இரண்டு அமைச்சரவைக் குழுவில் மட்டுமே இடம்பெற்றுள்ளார்.
சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, வீட்டு வசதி, பொருளாதார விவகாரம், அரசியல் விவகாரம், முதலீடு மற்றும் வளர்ச்சி ஆகிய அமைச்சரவைக் குழுவில் இடம்பெற்றுள்ளார்.
தர்மேந்திர பிரதான் பொருளாதார விவகாரம், வேலைவாய்ப்பு மற்றும் திறன் மேம்பாடு ஆகிய அமைச்சரவைக் குழுவில் இடம்பெற்றுள்ளார். ரயில்வேத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் வேலை வாய்ப்பு மற்றும் திறன் மேம்பாடு, முதலீடு மற்றும் வளர்ச்சி, அரசியல் விவகாரம், பொருளாதார விவகாரம் மற்றும் வீட்டு வசதி ஆகிய 5 அமைச்சரவைக் குழுவில் இடம்பெற்றுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...