திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று அதிகாலை தவெக தலைவர் விஜய் வழிபாடுபத்ம, பால புரஸ்காா் விருதுகள்: விண்ணப்பிக்க ஜூலை 31 கடைசிகடும் வெய்யில் எதிரொலி: தமிழகத்தில் தினசரி மின்நுகா்வு 20,000 மெகாவாட்-ஆக உயா்வுமாலியில் பாதுகாப்பு அமைச்சா் கொலை: கிளா்ச்சியாளா்கள் பிடியில் முக்கிய நகரங்கள்அரசுப் பணியாளா் அவமதிப்பு வழக்கு: மகாராஷ்டிர பாஜக அமைச்சருக்கு ஒரு மாதம் சிறைத் தண்டனைகர்நாடகம்: பூணூலை கழற்ற உத்தரவிட்ட தனியார் கல்லூரி கல்வி அதிகாரிகள் 3 பேர் கைதுகிரிமினல் வழக்குகளில் கைதாகும் முதல்வா்கள், பிரதமா்களை பதவி நீக்கக்கோரும் மசோதா: கருத்துகளைப் பெறும் நாடாளுமன்ற கூட்டுக்குழு
/

மோடி 2.0 அரசுக்கு டிரம்பின் பரிசு: முன்னுரிமை வர்த்தக நாடுகளில் பட்டியலில் இருந்து இந்தியா நீக்கம்

மோடியின் புதிய அரசுக்கு பல்வேறு சவால்கள் காத்திருக்கும் நிலையில், இதுவரை அமெரிக்கா அளித்து வந்த முன்னுரிமை வர்த்தக நாடு எனும் அந்தஸ்தில் இருந்து இந்தியாவை நீக்குவதாக டிரம்ப் அறிவித்துள்ளார்.

News image
Updated On :1 ஜூன் 2019, 8:52 am


மோடியின் புதிய அரசுக்கு பல்வேறு சவால்கள் காத்திருக்கும் நிலையில், இதுவரை அமெரிக்கா அளித்து வந்த முன்னுரிமை வர்த்தக நாடு எனும் அந்தஸ்தில் இருந்து இந்தியாவை நீக்குவதாக டிரம்ப் அறிவித்துள்ளார்.

ஜிஎஸ்பி எனும் வர்த்தக திட்டத்தின் கீழ், அமெரிக்காவின் முன்னுரிமை வர்த்தக நாடுகளின் பட்டியலில் இந்தியா இடம்பெற்றிருந்தது. அதாவது அமெரிக்காவின் மிகப் பெரியதும், பழமையானதுமான வர்த்தக முன்னுரிமை திட்டமான இதில், ஒருசில நாடுகளில் உற்பத்தியாகும் பொருட்கள், எந்த விதமான வரிவிதிப்பும் இன்றி அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு, அங்கு சந்தைகளில் விற்பனைக்கு வைக்கப்படுவதன் மூலம், அந்த நாட்டின் பொருளாதார மேம்பாட்டுக்கு உதவுவதே இந்த திட்டத்தின் அடிப்படைக் கொள்கை.

அமெரிக்காவின் இந்த திட்டத்தின் மூலம் பயனடையும் நாடுகளில் இந்தியா முதன்மையானதாக இருந்தது. இந்தியாவில் இருந்து சுமார் 2000 பொருட்கள் இந்த திட்டத்தின் கீழ் அமெரிக்காவுக்கு கட்டணமின்றி அனுப்பப்பட்டு வந்தது.

இந்த நிலையில், இந்திய சந்தையில் அமெரிக்காவை சமமாக நடத்தவில்லை என்றும், அதற்கான உறுதிமொழியை அளிக்க இந்தியா தவறிவிட்டதாலும், இதுவரை அளித்து வந்த முன்னுரிமை வர்த்தக நாடு எனும் அந்தஸ்தில் இருந்து இந்தியா நீக்கப்படுவதாகவும், 2019ம் ஆண்டு ஜூன் 5ம் தேதியோடு முன்னுரிமை வர்த்தக நாடு எனும் அந்தஸ்து முடிவுக்கு வருவதாகவும், அமெரிக்க அமைச்சரிடம் டிரம்ப் கூறியதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பாக மார்ச் 4ம் தேதியே அறிவிப்பினை வெளியிட்டிருந்தார் டிரம்ப் என்பதும், அந்த முடிவில் மாற்றமில்லை என்று தற்போது அறிவித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.