மதுரையில் இன்று காலை மீனாட்சி- சுந்தரேசுவரா் திருக்கல்யாண உத்ஸவம் சென்னை ஏரிகளில் 67% குடிநீா் இருப்புதிருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று அதிகாலை தவெக தலைவர் விஜய் வழிபாடுபத்ம, பால புரஸ்காா் விருதுகள்: விண்ணப்பிக்க ஜூலை 31 கடைசிகடும் வெய்யில் எதிரொலி: தமிழகத்தில் தினசரி மின்நுகா்வு 20,000 மெகாவாட்-ஆக உயா்வுமாலியில் பாதுகாப்பு அமைச்சா் கொலை: கிளா்ச்சியாளா்கள் பிடியில் முக்கிய நகரங்கள்அரசுப் பணியாளா் அவமதிப்பு வழக்கு: மகாராஷ்டிர பாஜக அமைச்சருக்கு ஒரு மாதம் சிறைத் தண்டனைகர்நாடகம்: பூணூலை கழற்ற உத்தரவிட்ட தனியார் கல்லூரி கல்வி அதிகாரிகள் 3 பேர் கைதுகிரிமினல் வழக்குகளில் கைதாகும் முதல்வா்கள், பிரதமா்களை பதவி நீக்கக்கோரும் மசோதா: கருத்துகளைப் பெறும் நாடாளுமன்ற கூட்டுக்குழு
/

என்னாது, ராஜஸ்தானில் பெட்ரோல், டீசல் விலை ரூ.5 உயர்ந்துவிட்டதா? 

பட்ஜெட் அறிவிப்பினால், ராஜஸ்தான் மாநிலத்தில் பெட்ரோல், டீசல் விலை ஐந்து ரூபாய் அளவுக்கு உயர்ந்துள்ளது. இது வெள்ளிக்கிழமை இரவு முதல் அமலுக்கு வந்துள்ளது.

News image
Updated On :6 ஜூலை 2019, 11:40 am


ஜெய்ப்பூர்: பட்ஜெட் அறிவிப்பினால், ராஜஸ்தான் மாநிலத்தில் பெட்ரோல், டீசல் விலை ஐந்து ரூபாய் அளவுக்கு உயர்ந்துள்ளது. இது வெள்ளிக்கிழமை இரவு முதல் அமலுக்கு வந்துள்ளது.

பெட்ரோல், டீசல் விலையானது, அதன் உச்சபட்ச மதிப்பிலிருந்து குறைந்துள்ளது. இதன் காரணமாகவும், அரசின் வரி வருவாயை அதிகரிக்கும் நோக்கிலும், பெட்ரோல், டீசல் மீதான கூடுதல் கலால் வரி லிட்டருக்கு ரூ.2 உயர்த்தப்படுகிறது. மேலும், பெட்ரோல், டீசல் மீதான சாலைக் கட்டமைப்பு வசதிகள் மேம்பாட்டுக்கான கூடுதல் வரியையும் (செஸ்) லிட்டருக்கு ரூ.2 உயர்த்த மத்திய அரசு முடிவெடுத்துள்ளது என்று நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.

இதன் தொடர்ச்சியாக, ராஜஸ்தான் மாநில அரசு பெட்ரோல் மீதான வாட் விகிதத்தை 26 சதவீதத்தில் இருந்து 30 சதவீதமாகவும், டீசல் மீதான வாட் வரியை 18ல் இருந்து 22 சதவீதமாகவும் உயர்த்தியது.

இதனால் ஒரே நாளில் பெட்ரோல் விலை ரூ.4.62 அளவுக்கு உயர்ந்ததால், பெட்ரோல் லிட்டர் விலை ரூ.71.15 ஆக இருந்த நிலையில், இன்று ரூ.75.77க்கு விற்பனையானது.

இதேப்போல டீசல் விலையும் ரூ.4.59 உயர்ந்து நேற்று ரூ.66.65க்கு விற்பனையான ஒரு லிட்டர் டீசல், இன்று ரூ.71.24 ஆக உள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.