2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

உங்கள் பிள்ளைகளை வெறுக்கிறீர்கள் என்றால் மோடிக்கு வாக்களியுங்கள்.. முதல்வரின் காரசாரப் பேச்சு

புது தில்லியில் இன்று 11,000 புதிய வகுப்பறைகளுக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

News image
Updated On :31 ஜனவரி 2024, 7:00 am

ENS


புது தில்லி: புது தில்லியில் இன்று 11,000 புதிய வகுப்பறைகளுக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

அடிக்கல்லை நாட்டி வைத்துப் பேசிய தில்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், பிரதமர் நரேந்திர மோடியையும் அவரது அரசையும் கடுமையாகத் தாக்கிப் பேசியுள்ளார்.

நிகழ்ச்சியில் தில்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் பேசுகையில், எதை நீங்கள் தேர்வு செய்வீர்கள்? தேச பக்தியையா அல்லது  மோடி பக்தியையா? என்று கேள்வி எழுப்பினார்.

மேலும், உங்கள் குழந்தைகளை உங்களுக்கு பிடிக்காது என்றால் நீங்கள் மோடிக்கு வாக்களிக்கலாம் என்றும் கேஜ்ரிவால் கூறியுள்ளார்.

இங்கே இந்த வகுப்பறைகளைக் கட்டுவது என்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. நானும், துணை முதல்வர் மணீஷும் ஒவ்வொரு விஷயத்துக்கும் போராடியுள்ளோம். உங்கள் குழந்தைகளை நீங்கள் விரும்புவதாக இருந்தால் ஆம் ஆத்மிக்கு வாக்களியுங்கள். வாக்களிக்கச் செல்லும் போது ஒன்றை நினைவில் கொள்ளுங்கள், கடந்த முறை பாஜகவுக்கு வாக்களித்ததால், நமது அனைத்துக் கோப்புகளும் திட்டங்களும் மத்திய அரசால் தடை செய்யப்பட்டதை எண்ணிப் பாருங்கள் என்று கூறினார் அரவிந்த் கேஜ்ரிவால்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.