இந்தியாவின் 70வது குடியரசு தின விழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் இந்திய - பாகிஸ்தான் எல்லையில் இரு நாட்டு ராணுவத்தினருக்கும் இடையே இனிப்புப் பரிமாற்றம் நடைபெற்றது.
முன்னதாக, எல்லையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள இந்திய எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) வீரர்களுக்கு குடியரசு தினத்தை முன்னிட்டு இனிப்புகள் வழங்கப்பட்டது. இந்திய தேசத்தைக் காக்கும் வீரர்கள், 70வது குடியரசு தினத்தை சக வீரர்களுடன் இனிப்புப் பரிமாறிக் கொண்டாடினர்.
இந்திய - பாகிஸ்தான் எல்லைப் பகுதிகளான அட்டாரி - வாகா எல்லையில் இந்திய எல்லைப் பாதுகாப்புப் படை அதிகாரி, பாகிஸ்தான் பாதுகாப்புப் படை அதிகாரியிடம் இனிப்பு வழங்க, பாகிஸ்தான் தரப்பிலும் இந்தியாவுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.
ஆண்டுதோறும் இந்திய சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினத்தின் போது வாகா - அட்டாரி எல்லையில் இனிப்புப் பரிமாற்றம் நடைபெறுவது வழக்கம் என்றாலும், சில சமயங்களில், இந்திய - பாகிஸ்தான் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல்களை நடத்தும் போது, இனிப்புப் பரிமாற்றத்தை இந்தியா நிறுத்தி வைப்பது வழக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

குடும்பக் கதையில் நடிக்கும் கவின்!

அயோத்தி இயக்குநர் இயக்கத்தில் விஜய் ஆண்டனி!

தில்லியில் பெண் வழக்கறிஞருக்கு கத்திக்குத்து: கணவர் தலைமறைவு
மக்கள் எதிர்பார்த்த விடுதலை மே 4-ல் கிடைக்கும்: நிர்மல் குமார்
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


