/

நீங்கள் ஏன் வெளி இடங்களில் தங்கக் கூடாது?: பிகார் முதல்வருக்கு பாட்னா உயர் நீதிமன்றம் கேள்வி 

உயர் பாதுகாப்பு அளிக்கப்படும் பட்சத்தில் அரசு பங்களாக்களை தவிர்த்து நீங்கள் ஏன் வெளி இடங்களில் தங்கக் கூடாது? என்று பிகார் முதல்வருக்கு பாட்னா உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. 

News image
Updated On :8 ஜனவரி 2019, 11:16 am

பாட்னா: உயர் பாதுகாப்பு அளிக்கப்படும் பட்சத்தில் அரசு பங்களாக்களை தவிர்த்து நீங்கள் ஏன் வெளி இடங்களில் தங்கக் கூடாது? என்று பிகார் முதல்வருக்கு பாட்னா உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. 

முன்னாள் முதல்வர்களுக்கு அரசு பங்களாக்கள் ஒதுக்கீடு செய்வது தொடர்பாக பிகார் முதல்வர் நிதிஷ் குமார் உள்ளிட்ட தலைவர்கள் பாட்னா உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடுத்திருந்தனர்.  

அந்த வழக்கானது செவ்வாயன்று நீதிபதி சஹாய் தலைமையிலான அமர்வின் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, 'உங்களுக்கு எல்லாம் உயர் பாதுகாப்பு வழங்கப்படுகிறது? அப்படியிருக்கும்போது நீங்கள் அரசு பங்களாக்களைத்தான் தங்கி இருக்க வேண்டுமா? நீங்கள் ஏன் வெளி இடங்களில் தங்கக் கூடாது?' என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இது தொடர்பாக நானகு வாரங்களுக்குள் பதில் அளிக்குமாறு அனைவருக்கும் நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டனர்.  
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.