ஆம் ஆத்மியில் இருந்து மேலும் சில தலைவர்கள் விலகுவார்கள்: பாஜகவில் இணைந்த எம்.பி. ஸ்வாதி மாலிவால்நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு எப்போது? என்டிஏ அறிவிப்புவருகிறது புதிய ரியல்மி சி100எக்ஸ்! எப்போது அறிமுகம்?எச்-1பி விசாவுக்கு 3 ஆண்டுகள் தடை? டிரம்ப் அரசு புதிய மசோதா!திருச்சி மாவட்டத்தில் திரும்பிப் பார்க்க வைத்த திருவெறும்பூர் தொகுதி! காரணம் என்ன?வாக்குச்சாவடியாகும் பள்ளிகளை சுத்தம் செய்வது யார் பொறுப்பு?கடந்த ஆண்டு பள்ளியில் ஆசிரியை கொலை! பழிக்குப் பழியாக இளைஞரைக் கொன்ற தந்தை!!யமுனையில் படகு சவாரி செய்து பாருங்கள்! மோடியைக் கேலி செய்த மமதா!வாக்களித்த பிறகு சென்னை திரும்பும் மக்கள்! பேருந்து, ரயில்களில் அலைமோதும் பயணிகள் கூட்டம்!வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது? மதுரையில் மு.க. ஸ்டாலின் பதில்!
/

நம்பிக்கை இழந்துவிட்டோம்; உடலையாவது மீட்டுக் கொடுங்கள்.. 15 குடும்பங்களின் கண்ணீர் கோரிக்கை

மேகாலயாவின் கிழக்கு ஜெயின்டியா மலைப் பகுதியில் இருந்த சுரங்கத்தில் 15 தொழிலாளர்கள் சிக்கி 17 நாட்களுக்கும் மேல் ஆன நிலையில், தொடர்ந்து மீட்புப் பணிகள் நடந்து வருகின்றன.

News image
Updated On :4 ஜனவரி 2019, 7:56 am

மேகாலயாவின் கிழக்கு ஜெயின்டியா மலைப் பகுதியில் இருந்த சுரங்கத்தில் 15 தொழிலாளர்கள் சிக்கி 17 நாட்களுக்கும் மேல் ஆன நிலையில், தொடர்ந்து மீட்புப் பணிகள் நடந்து வருகின்றன.

தொடர் மீட்புப் பணிகளுக்கு இடையே, சுரங்கத்தில் சிக்கியிருக்கும் தொழிலாளர்களின் 3 தலைக்கவசங்கள் மட்டுமே நேற்று மீட்கப்பட்டுள்ளது.

இது குறித்து தகவல் அறிந்த 15 தொழிலாளர்களின் குடும்பத்தினரும், அவர்கள் உயிரோடு இருப்பார்கள் என்ற நம்பிக்கையை இழந்துவிட்டோம். அவர்களது உடல்களையாவது மீட்டுக் கொடுங்கள் என்று கண்ணீரோடு கதறுகிறார்கள்.

ஆமை வேகத்தில் நடக்கும் மீட்புப் பணி இன்று 17வது நாளாக தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த மீட்புப் பணிகள் மூலம் தொழிலாளர்கள் உயிரோடு மீட்க முடியாது என்றாலும், அவர்களது உடல்களையாவது மீட்டு வீட்டுக்குக் கொண்டு வர உதவுங்கள் என்பதே அவர்களது முக்கியக் கோரிக்கையாக உள்ளது.

மேகாலயா மற்றும் அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த 15 தொழிலாளர்கள் வறுமையின் பிடியில் சிக்கித் தவிக்கும் தங்களது குடும்பத்தைக் காப்பாற்றவே இந்த ஆபத்து நிறைந்த சுரங்கப் பணிக்குச் சென்றனர். ஆனால் அதுவே அவர்களுக்கு எமனாகி, தங்களது குடும்பங்களை மீட்கமுடியாத துன்பத்தில் ஆழ்த்திச் சென்றுள்ளது.

ஒவ்வொரு தொழிலாளியின் குடும்பமும் அழுதழுது கண்ணீர் வற்றி கடைசியாக அவர்களது உடலையாவது பார்ப்போமா என்ற  கவலையோடு காத்திருக்கிறார்கள். அரசு உதவி செய்தாலொழிய வாழ்வதற்கு வேறு வழியில்லை என்ற நிலையில் ஆதரவற்று நிற்கிறது தொழிலாளர்களின் குடும்பங்கள்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.