புது தில்லி: நாடுமுழுவதும் ஜம்மு காஷ்மீர் மாணவர்கள் மீதான தாக்குதல் சம்பவங்கள் தொடர்பான வழக்கில், புதிய உத்தரவு பிறப்பிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
காஷ்மீர் மாநிலம், புல்வாமாவில் கடந்த 14ஆம் தேதி நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் 40 சி.ஆர்.பி.எப் வீரர்கள் உயிரிழந்தனர். பாகிஸ்தானில் இயங்கி வரும் ஜெய்ஷ் ஏ முகமது பயங்கரவாத அமைப்பு இதற்கு பொறுப்பேற்றுள்ளது. இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
இதனிடையே இத்தாக்குதலையடுத்து காஷ்மீர் மாணவர்கள் மீது பல்வேறு பகுதிகளில் தாக்குதல் நடந்ததாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக காஷ்மீரைச் சேர்ந்த தாரீக் ஆதிப் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு அவசர வழக்காக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு முன் கடந்த 22-ஆம் தேதியன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது நாடு முழுவதும் உள்ள ஜம்மு காஷ்மீர் மாணவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம் மாணவர்கள் மீதான தாக்குதல்களை தடுக்க என்னென்னெ நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது என்பது பற்றி விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் ஆணை பிறப்பித்தது.
இந்நிலையில் நாடுமுழுவதும் ஜம்மு காஷ்மீர் மாணவர்கள் மீதான தாக்குதல் சம்பவங்கள் தொடர்பான வழக்கில், புதிய உத்தரவு பிறப்பிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
இந்த வழக்கானது புதனன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது மத்திய அரசு சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் 22-ஆம் தேதி உத்தரவிற்குப் பிறகு ஜம்மு காஷ்மீர் மாணவர்கள் மீது எந்த விதமான தாக்குதலும் நடைபெறவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.
இதனை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் இந்த வழக்கில் புதிய உத்தரவு பிறப்பிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. அதேசமயம் மத்திய அரசு மற்றும் 10 மாநிலங்கள் இந்த வழக்கு தொடர்பாக எழு நாட்களில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தில்லி ரோஹிணி மெட்ரோ ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்! நபர் கைது

ஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி முதலில் பந்துவீச்சு!
லெனின் பாண்டியன் படத்தின் முதல் பாடல் எப்போது?
தெலங்கானா மேலவை உறுப்பினர்களாக அசாருதீன், கோதண்டராமை நியமிக்க ஆளுநர் ஒப்புதல்!
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


