ராஜஸ்தானுக்கு எதிரான ஐபிஎல் ஆட்டத்தில் ஹைதராபாத் அணி முதலில் பந்துவீச்சுடெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!மக்கள் எதிர்பார்த்த விடுதலை மே 4-ல் கிடைக்கும்: நிர்மல் குமார்அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்குதிமுகவே மீண்டும் ஆட்சி; விஜய்யால் அரசியல் சூழல் மாறும்: திருமாவளவன்நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு எப்போது? என்டிஏ அறிவிப்பு
/

இந்திய விமானப் படை விங் கமாண்டர் அபிநந்தன் மாயம்: வெளியுறவுத் துறை உறுதி

இந்திய விமானப் படை விங் கமாண்டர் அபிநந்தன் பிடிபட்டிருப்பதாக பாகிஸ்தான் கூறியிருப்பது குறித்து விசாரித்து வருவதாக

News image
Updated On :27 பிப்ரவரி 2019, 10:51 am


புது தில்லி: இந்திய விமானப் படை விங் கமாண்டர் அபிநந்தன் பிடிபட்டிருப்பதாக பாகிஸ்தான் கூறியிருப்பது குறித்து விசாரித்து வருவதாக இந்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார் தெரிவித்துள்ளார்.

இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டிருக்கும் நிலையில் புது தில்லியில் இன்று இந்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார் செய்தியாளர்களை சந்தித்தார்.

தனது பேச்சைத் துவக்கும் முன்பே, இந்த சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்கள் கேள்வி எழுப்புவதைத் தவிர்க்குமாறு கூறிவிட்டு, தனது பேச்சைத் தொடங்கினார்.

அப்போது அவர் கூறியதாவது, பாகிஸ்தான் எல்லையில் இருந்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத பயிற்சி முகாம்கள் மீது இந்திய விமானப் படை தாக்குதல் நடத்தியதன் எதிரொலியாக இன்று காலை  இந்திய எல்லைக்குள் நுழைந்து பாகிஸ்தான் விமானங்கள் தாக்குதல் நடத்தின. அவற்றை இந்திய விமானப் படை விமானங்கள் எதிர்கொண்டன. அப்போது இந்திய விமானப் படை விமானங்கள் பாகிஸ்தானின் விமானம் ஒன்றை சுட்டு வீழ்த்தியது.

இந்த சண்டையில் இந்திய விமானப் படையின் மிக் 21 ரக விமானம் ஒன்றை துரதிருஷ்டவசமாக இழந்துள்ளோம். இந்த சம்பவத்தில் விமானியும் காணாமல் போயுள்ளார். கைது செய்யப்பட்ட இந்திய விமானி தங்கள் வசம் இருப்பதாக பாகிஸ்தான் கூறியுள்ளது. அது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது என்று தெரிவித்துள்ளார்.

இந்திய விமானப் படை விமானம் மிக் - 21 பிஸோன் ஜெட் விமானத்தில் சென்ற விங் கமாண்டர் அபிநந்தன், இதுவரை திரும்பவில்லை என்று ஏஎன்ஐ சற்று நேரத்துக்கு முன்பு செய்தி வெளியிட்டிருந்தது.

முன்னதாகவே, இந்திய விமானப் படை விமானம் ஒன்றை பாகிஸ்தான் ராணுவம் சுட்டு வீழ்த்தியதாகவும், அதில் இருந்த கமாண்டோ அபிநந்தன் என்ற விமானியை பிடித்து வைத்திருப்பதாகவும் பாகிஸ்தான் அறிவித்து, சில விடியோக்களையும் வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.