ராஜஸ்தானுக்கு எதிரான ஐபிஎல் ஆட்டத்தில் ஹைதராபாத் அணி முதலில் பந்துவீச்சுடெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!மக்கள் எதிர்பார்த்த விடுதலை மே 4-ல் கிடைக்கும்: நிர்மல் குமார்அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்குதிமுகவே மீண்டும் ஆட்சி; விஜய்யால் அரசியல் சூழல் மாறும்: திருமாவளவன்நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு எப்போது? என்டிஏ அறிவிப்பு
/

இந்திய விமானப் படைத் தாக்குதல்: பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் அவசர ஆலோசனை

இந்திய விமானப் படையினர், பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்து அதிரடித் தாக்குதல் நடத்தியிருப்பதை அடுத்து பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா மஹ்மூத் குரேஷி அவசர ஆலோசனைக்கு அழைப்பு விடுத்தார்.

News image
Updated On :26 பிப்ரவரி 2019, 7:39 am


இஸ்லாமாபாத்: இந்திய விமானப் படையினர், பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்து அதிரடித் தாக்குதல் நடத்தியிருப்பதை அடுத்து பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா மஹ்மூத் குரேஷி அவசர ஆலோசனைக்கு அழைப்பு விடுத்தார்.

பாகிஸ்தான் ஆக்ரமிப்பு காஷ்மீர் பகுதியில் இருந்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத பயிற்சி முகாம்கள் மீது இன்று அதிகாலை 3.30 மணியளவில் இந்திய விமானப் படையினர் நடத்திய தாக்குதலில் முகாம்கள் முற்றிலும் அழிக்கப்பட்டு 200 - 300 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டிருக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், இஸ்லாமாபாத்தில் இன்று பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் தலைமையில் அவசர ஆலோசனைக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்த அவசர ஆலோசனையில் பாகிஸ்தான் வெளியுறவுத் துறையின் முன்னாள் செயலர்கள் மற்றும் முன்னாள் தூதர்களும் பங்கேற்பதாகக் கூறப்படுகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.