தலித் என்பதால் எனக்கு மூன்று முறை முதல்வர் பதவி மறுக்கப்பட்டது என்று கர்நாடக துணை முதல்வர் ஜி.பரமேஸ்வரா ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
கர்நாடகாவில் உள்ள தாவண்கரே மாவட்டத்தில் சாலவாடி பட்டியலின சமூகத்தினர் கூட்டத்தில் அம்மாநில துணை முதல்வர் ஜி.பரமேஸ்வரா பங்கேற்றார். அப்போது பேசிய அவர்,
"தலித் தலைவர்களுக்கு முதல்வர் வாய்ப்பு வழங்கப்படுவதில்லை. மறைந்த காங்கிரஸ் தலைவர் பசவலிங்கப்பா, கர்நாடக மாநில முன்னாள் காங்கிரஸ் தலைவர் கேஹெச் ரங்காநாத் மற்றும் மல்லிகார்ஜூன் கார்கே ஆகியோர் முதல்வர்களாகியிருக்க வேண்டும். நான் தலித் என்பதால் எனக்கு மூன்று முறை முதல்வர் பதவி மறுக்கப்பட்டது. ஆனால், மனமில்லாமல் ஒருவழியாக துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டது.
அரசு அளவிலும் தலித்துகள் மீது பாகுபாடுகள் பார்க்கப்படுகிறது. இடஒதுக்கீடு வசதி இருந்தாலும், பதவி உயர்வில் அநீதி இழைக்கப்படுகிறது. பதவியிறக்கம் செய்யப்பட்ட 7 அரசு அதிகாரிகள் தற்கொலை செய்துள்ளனர். பதவி உயர்விலும் இடஒதுக்கீட்டை அமல்படுத்த எங்களது அரசு அடுத்த வாரம் புதிய விதிகளை கொண்டு வரும்" என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
வேட்டுவம் வெளியீடு எப்போது?
பெட்ரோல் விலை கடுமையாக உயரும்: ராகுல் காந்தி
லுங்கி இங்கிடி நலமுடன் உள்ளார்: ஐபிஎல் நிர்வாகம் தகவல்

மது, சூதாட்ட விளம்பரங்களில் நடிக்க மாட்டேன்: ஜிவி பிரகாஷ்
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


