கே.எல்.ராகுல் சதம் வீண்: டெல்லிக்கு எதிராக இமாலய இலக்கை துரத்திப் பிடித்த பஞ்சாப்! ராஜஸ்தானுக்கு எதிரான ஐபிஎல் ஆட்டத்தில் ஹைதராபாத் அணி முதலில் பந்துவீச்சுடெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!மக்கள் எதிர்பார்த்த விடுதலை மே 4-ல் கிடைக்கும்: நிர்மல் குமார்அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்குதிமுகவே மீண்டும் ஆட்சி; விஜய்யால் அரசியல் சூழல் மாறும்: திருமாவளவன்நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு எப்போது? என்டிஏ அறிவிப்பு
/

பந்திப்பூர் புலிகள் காப்பகத்தின் 2,500 ஏக்கர் வனத்தை சாம்பலாக்கிச் சென்ற காட்டுத் தீ

கூடலூரை அடுத்துள்ள பந்திப்பூர் புலிகள் காப்பக வனத்தில் திடீரென ஏற்பட்ட பலத்த காட்டுத் தீயால் 2,500 ஏக்கர் வனப்பகுதி சாம்பலாக உருகுலைந்துபோனது.

News image
Updated On :25 பிப்ரவரி 2019, 9:15 am

கூடலூரை அடுத்துள்ள பந்திப்பூர் புலிகள் காப்பக வனத்தில் திடீரென ஏற்பட்ட பலத்த காட்டுத் தீயால் 2,500 ஏக்கர் வனப்பகுதி சாம்பலாக உருகுலைந்துபோனது.

சனிக்கிழமை நேரிட்ட இந்த காட்டுத் தீயால் தமிழக-கர்நாடக எல்லை மூடப்பட்டது. இந்த காட்டுத் தீ மனிதனால் செயற்கையாக உருவாக்கப்பட்டது என்றே தெரிய வந்துள்ளது.

நீலகிரி மாவட்டம், கூடலூர் அருகே முதுமலை புலிகள் காப்பக எல்லையை அடுத்துள்ள கர்நாடக மாநிலத்தின் பந்திப்பூர் புலிகள் காப்பக வனத்தில் ஏற்பட்ட திடீர் காட்டுத் தீயால் பல நூறு ஏக்கர் காடுகள் எரிந்து சாம்பலாகின.   

தீயை அணைக்க கர்நாடக வனத் துறையினர் எவ்வளவோ போராடியும் முடியவில்லை. முதுமலை புலிகள் காப்பகத்தில் பணிபுரியும் ஊழியர்களை அனுப்பி தீயைக் கட்டுப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டது.

காட்டுத் தீயின் காரணமாக இரு மாநில எல்லைப் பகுதி புகை மண்டலமாக மாறியது. கூடலூர்-பெங்களூரூ சாலையோரம் காட்டுத் தீ பரவியதால் கர்நாடக வனத் துறையினர் உடனே கக்கநல்லாவிலுள்ள இரு மாநில எல்லையை மூடி போக்குவரத்தை தடை செய்தனர். தொடர்ந்து தீயை அணைக்கும் பணி நடைபெற்றது. 

பல ஆயிரக்கணக்கான ஏக்கர் வனப்பகுதி எரிந்து சாம்பலாகிப் போனது.

இதற்கிடையே, தீயில் கருவிய விலங்குகளின் புகைப்படங்கள் என்று சமூக வலைத்தளங்களில் 4 புகைப்படங்கள் பரவி வருகிறது. தீயில் கருகிய முயல், பாம்பு, குரங்கின் புகைப்படங்கள் பழைய புகைப்படங்கள் என்றும், அதனை பந்திப்பூர் காட்டுத் தீயில் உயிரிழந்த விலங்குகளின் புகைப்படங்கள் என்று யாரும் வெளியிட வேண்டாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.