மாண்டியா: கடுமையான நடவடிக்கை எடுத்து, பயங்கரவாதிகளைத் தண்டித்து, தனது கணவரின் ஆத்மா சாந்தியடைய மத்திய அரசு தீவிரம் காட்ட வேண்டும் என்று புல்வாமா தாக்குதலில் வீரமரணம் அடைந்த எச். குருவின் மனைவி கலாவதி (22) கூறியுள்ளார்.
கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தைச் சேர்ந்த குரு, புல்வாமாவில் கடந்த வியாழக்கிழமை நடத்தப்பட்ட தாக்குதலில் பலியான 40க்கும் மேற்பட்ட சிஆர்பிஎஃப் வீரர்களில் ஒருவர்.

சம்பவம் குறித்து செய்தி அறிந்ததும், மாவட்ட அதிகாரிகளும், அரசியல் கட்சித் தலைவர்களும் குருவின் வீட்டுக்கு வந்து குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறிய வண்ணம் உள்ளனர்.
வருவோர் அனைவரிடமும் கலாவதி கேட்கும் ஒரே கேள்வி இதுதான், நாட்டுக்காக சேவையாற்றும் எனது கணவரைக் கொன்றிருப்பதன் மூலம் பயங்கரவாதிகளுக்கு கிடைத்தது என்ன? என்பதே. இந்த சம்பவத்துக்குக் காரணமான பயங்கரவாதிகளை கடுமையாக தண்டிப்பதன் மூலம், அவரது ஆத்மா சாந்தியடையும் என்று கூறி கதறி அழுகிறார்.

குரு - கலாவதிக்கு 7 மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடந்தது. புது வாழ்க்கையை பல கனவுகளோடு தொடங்கிய தம்பதியின் வாழ்க்கை அதற்குள் முடிந்தே போய்விட்டது.
தனது கணவர் சென்ற வாகனம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு இலக்காகியது குறித்து செய்திகள் வந்ததும், அதனை நம்ப மறுத்த கலாவதி, தனது இஷ்ட தெய்வங்களுக்கு எல்லாம் விளக்கேற்றி தனது கணவர் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டார்.
ஆனால், வெள்ளிக்கிழமை வீர மரணம் அடைந்தவர்களின் பட்டியலை பாதுகாப்புத் துறை அமைச்சகம் வெளியிட்ட போது, ஒட்டுமொத்தக் குடும்பமும் அதிர்ச்சியில் உறைந்துபோய்விட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

போதிய பேருந்து வசதி இல்லை! 20 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வாக்களிக்க முடியவில்லை! - Nirmal Kumar | TVK

தற்கொலை எண்ணத்தில் இருந்தேன்: ரத்னகுமார்

தில்லி ரோஹிணி மெட்ரோ ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்! நபர் கைது

ஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி முதலில் பந்துவீச்சு!
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


