ஆம் ஆத்மியில் இருந்து மேலும் சில தலைவர்கள் விலகுவார்கள்: பாஜகவில் இணைந்த எம்.பி. ஸ்வாதி மாலிவால்நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு எப்போது? என்டிஏ அறிவிப்புவருகிறது புதிய ரியல்மி சி100எக்ஸ்! எப்போது அறிமுகம்?எச்-1பி விசாவுக்கு 3 ஆண்டுகள் தடை? டிரம்ப் அரசு புதிய மசோதா!திருச்சி மாவட்டத்தில் திரும்பிப் பார்க்க வைத்த திருவெறும்பூர் தொகுதி! காரணம் என்ன?வாக்குச்சாவடியாகும் பள்ளிகளை சுத்தம் செய்வது யார் பொறுப்பு?கடந்த ஆண்டு பள்ளியில் ஆசிரியை கொலை! பழிக்குப் பழியாக இளைஞரைக் கொன்ற தந்தை!!யமுனையில் படகு சவாரி செய்து பாருங்கள்! மோடியைக் கேலி செய்த மமதா!வாக்களித்த பிறகு சென்னை திரும்பும் மக்கள்! பேருந்து, ரயில்களில் அலைமோதும் பயணிகள் கூட்டம்!வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது? மதுரையில் மு.க. ஸ்டாலின் பதில்!
/

வாகன பழுது நீக்கும் மையத்தில் 4 வயது சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு

ஹைதராபாத் அருகே மெட்செல் வாகன பழுது நீக்கும் மையத்தின் அலட்சியம் காரணமாக நான்கு வயது சிறுவன் உயிர் இழந்தான்.

News image

கோப்பு படம்

Updated On :24 டிசம்பர் 2019, 3:02 am

ஹைதராபாத் அருகே மெட்செல் எனும் பகுதியில் வாகன பழுது நீக்கும் மையத்தில் அமைந்துள்ள குழியில் விழுந்து சின்தா அஞ்சய்யா (4) ஞாயிற்றுக்கிழமை மாலை உயிர் இழந்தான். 

வீட்டின் அருகில் விளையாடிக் கொண்டிருந்தபோது இந்த விபத்து நேரிட்டது. அங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பின் சிசிடிவி கேமராவில்  இச்சம்பவம் பதிவாகியுள்ளது.

வாகனப் பழுது நீக்கத்துக்காக தோண்டப்பட்ட குழியை முறையாக மூடாமல் இருந்த அந்த தனியார் மையத்தின் அலட்சியத்தால் சிறுவனின் மரணம் ஏற்பட்டதாக  போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

முன்னதாக விளையாடச் சென்ற தங்களது மகனை சுமார் ஒரு மணி நேரமாக காணவில்லை என்பதால் தேடிய பெற்றோர், காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதே சமயம், ​​ஒரு குழந்தையின் உடல் குழியில் இருப்பதாக தகவலறிந்து, போலீஸாருடன் அங்குச் சென்றபோது, ​​ தங்கள் மகன் உயிரிழந்திருப்பதைக் கண்டு அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.