ஜம்மு காஷ்மீரில் கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளதால் தேசிய நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
ஜம்மு-காஷ்மீரில் சமவெளிப் பகுதிகள் மிதமான பனிப்பொழிவைப் பெற்றிருந்தாலும், பள்ளத்தாக்கு பகுதிகளில் கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. காஷ்மீர் பள்ளத்தாக்கு முழுவதும் வெள்ளை கம்பளம் விரித்தாற்போன்று காணப்படுகிறது. இதனால் ஜம்மு - ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பல லாரிகள் நெடுஞ்சாலையில் சிக்கித் தவிக்கின்றன. மேலும், போக்குவரத்து சேவை பாதிக்கப்பட்டுள்ளதால்உள்ளூர் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். வெளியில் செல்ல முடியாததால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
லடாக்கின் யூனியன் பிரதேசத்திலும் டிராஸ் மற்றும் கார்கில் ஆகிய பகுதிகளிலும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை பிற்பகல் வரை பனிப்பொழிவு இருக்கும் என்றும் அதன்பின்னர் பனிப்பொழிவு படிப்படியாக குறையும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
பொறுப்பால் உயரும் பெருமை!
கடைசிப் பந்து சிக்ஸரால் மாறிய ஆட்டத்தின் போக்கு: சூப்பர் ஓவரில் கொல்கத்தா ‘த்ரில்’ வெற்றி!
மேற்கு வங்கம்: திரிணமூல் தொண்டா் வீட்டில் 73 நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல்! என்ஐஏ விசாரணை!!

தொழில்நுட்பத்தை எதிர்கொள்வோம்!
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


