நமாமி கங்கா திட்டத்தின் காரணமாகவே தற்போது கங்கா நதி தூய்மையாக உள்ளது என்று உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
தொழிற் சாலைக் கழிவுகள், நீர்வரத்துக் குறைவு மற்றும் வேகமாக சரிந்துவரும் நிலத்தடி நீர்மட்டம் போன்ற காரணங்களால் கங்கை நதி மாசடைந்தது. இதனை தடுக்கும் நோக்கிலும், கங்கை நதியை தூய்மைப்படுத்தும் நோக்கிலும் 'நமாமி கங்கா திட்டம்' கடந்த 2016ல் தொடங்கப்பட்டது.
இந்நிலையில், இன்று கங்கை நதியை பார்வையிட வந்த முதல்வர் யோகி ஆதித்யநாத், 'இந்தியாவில் தாய்க்கு சமமானதாகக் கருதப்படும் கங்கை நதியை சுத்தம் செய்ய பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் 'நமாமி கங்கா திட்டம்' தொடங்கப்பட்டது. மிகவும் தூய்மையான நதிக்காக, இந்த இயக்கத்தை ஆரம்பித்த நரேந்திர மோடி அவர்களுக்கு நான் நன்றி கூறுகிறேன். நீண்ட நாட்களுக்கு பிறகு தற்போது கங்கை நதியில் அதிகப்படியான மீன்கள் காணப்படுகின்றன.
தற்போது நான் நின்று கொண்டிருக்கும் சிசாமோ கால்வாய் ஒருகாலத்தில் ஆசியா முழுவதிலும் மிகப்பெரிய கழிவுநீர் வடிகாலாக இருந்தது. மேலும், கான்பூரின் முழு கழிவுகளும் ஆற்றில் கலந்தன. கழிவுநீர் காரணமாக முழு நதியும் கறுப்பாக மாறியது. ஆனால் இப்போது நிலைமை மிகவும் சீராகியுள்ளது. இதுபோல மாநிலத்தில் பல இடங்களில் உள்ள கழிவுநீர் கால்வாய்கள் ஆற்றுடன் இணைவதை தடுத்து, ஆற்றின் சுத்தமான நிலையை பேணுவோம்' என்று கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

குடும்பக் கதையில் நடிக்கும் கவின்!

அயோத்தி இயக்குநர் இயக்கத்தில் விஜய் ஆண்டனி!

தில்லியில் பெண் வழக்கறிஞருக்கு கத்திக்குத்து: கணவர் தலைமறைவு
மக்கள் எதிர்பார்த்த விடுதலை மே 4-ல் கிடைக்கும்: நிர்மல் குமார்
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


