சட்டத்தை யாரும் கையில் எடுக்கக்கூடாது என்று ஹைதராபாத் என்கவுன்டர் குறித்து பாஜக எம்.பி மேனகா காந்தி தெரிவித்துள்ளார்.
தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் பெண் கால்நடை மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் 4 பேர் வெள்ளிக்கிழமை அதிகாலை போலீஸாரின் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர். குற்றவாளிகள் நால்வரும் தப்பிச்செல்ல முயன்றதால் அவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.
குற்றவாளிகளுக்கு தூக்குத்தண்டனை வழங்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிய நிலையில், குற்றவாளிகள் சுட்டுக்கொல்லப்பட்டது மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், ஹைதராபாத்தில் குற்றவாளிகள் என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டது குறித்து மத்திய முன்னாள் அமைச்சரும், பாஜக எம்.பியுமான மேனகா காந்தி, 'ஹைதராபாத் என்கவுன்டர் அதிர்ச்சியான செய்தி. சட்டத்தை யாரும் கையில் எடுக்கக் கூடாது. உங்கள் விருப்பத்திற்கேற்ப குற்றவாளிகளை நீங்கள் குற்றவாளிகளை சுட்டுக்கொல்ல முடியாது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் நீதிமன்றத்தால் தூக்கிலிடப்படுவதுதான் சரியானது. சட்ட ரீதியாக சரியான முறையில் குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டிருக்க வேண்டும். விருப்பத்திற்கேற்ப செயல்பட்டால் சட்டம், நீதிமன்றம், காவல்துறை எல்லாம் எதற்கு?' என்று கேள்வி எழுப்பினார்.
ஆனால், சமாஜ்வாதி கட்சி எம்.பி ஜெயா பச்சன், 'தாமதமாக வழங்கப்பட்ட நீதி' என்று குறிப்பிட்டுள்ளார். முன்னதாக, குற்றவாளிகள் பொதுவெளியில் மக்கள் முன்னிலையில் தண்டிக்கப்பட வேண்டும் என்று ஜெயா பச்சன் மக்களவையில் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சாய் சுதர்சன் அரைசதம் விளாசல்; குஜராத் டைட்டன்ஸுக்கு 4-வது வெற்றி!

பயங்கரவாதிகளுக்கு பிரியாணி கொடுக்கிறது காங்கிரஸ், திரிணமூல் : அமித் ஷா
கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிராக லக்னௌ பந்துவீச்சு!

ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் வங்கியின் 4வது காலாண்டு லாபம் 5% உயர்வு!
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


