ஹைதராபாத் என்கவுன்டரில் ஈடுபட்ட போலீஸார் அனைவருக்கும் தலா ரூ.1 லட்சம் பரிசு வழங்குவதாக ஹரியாணா தொழிலதிபர் ஒருவர் அறிவித்துள்ளார்.
தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் பெண் கால்நடை மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் 4 பேர் வெள்ளிக்கிழமை அதிகாலை போலீஸார் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர். குற்றவாளிகள் நால்வரும் தப்பிச்செல்ல முயன்றதால் அவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.

முன்னதாக, குற்றவாளிகளுக்கு தூக்குத்தண்டனை வழங்க வேண்டும் அல்லது குற்றவாளிகளை எங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் தெலங்கானா மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில், குற்றவாளிகள் சுட்டுக்கொல்லப்பட்டது மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போலீஸாருக்கு இனிப்பு வழங்கி தெலங்கானா மக்கள் இதனை கொண்டாடி வருகின்றனர்.
இதற்கிடையே ஹரியாணா மாநிலம் ஹிசார் பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர், 'ரா குரூப் பவுண்டேஷன்' என்ற நிறுவனத்தின் தலைவர் நரேஷ் செல்பார் என்பவர் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதாவது, என்கவுன்டரில் ஈடுபட்ட தெலங்கானா போலீஸார் அனைவருக்கும் தலா ரூ.1 லட்சம் பரிசு வழங்குவதாக அவர் அறிவித்துள்ளார். இதனை மக்கள் பலரும் வரவேற்றுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சாய் சுதர்சன் அரைசதம் விளாசல்; குஜராத் டைட்டன்ஸுக்கு 4-வது வெற்றி!

பயங்கரவாதிகளுக்கு பிரியாணி கொடுக்கிறது காங்கிரஸ், திரிணமூல் : அமித் ஷா
கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிராக லக்னௌ பந்துவீச்சு!

ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் வங்கியின் 4வது காலாண்டு லாபம் 5% உயர்வு!
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


