அரக்கோணம்-திருத்தணி மின்சார ரயில் இன்றுமுதல் 21 நாள்களுக்கு ரத்துஇளநிலை நீட் தேர்வு: இன்று ஹால் டிக்கெட் வெளியீடு!ஊழியா்கள் - அதிகாரிகளுக்கு ஊதிய உயா்வு: பொதுத் துறை வங்கிகளுக்கு அரசு அறிவுறுத்தல்நாட்டில் மின் தேவை 256 ஜிகாவாட்டாக உயா்ந்து புதிய உச்சம்!ஈரானுடன் அமைதிப் பேச்சு: பாகிஸ்தானுக்கு அமெரிக்க பிரதிநிதிகள் செல்ல மாட்டார்கள்! - டிரம்ப்
/

அரசுப் பள்ளிகளில் மாணவிகளுக்கு தற்காப்புப் பயிற்சி கட்டாயம்: மத்திய அமைச்சர் வலியுறுத்தல்

பெண் குழந்தைகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, பள்ளிகளில் சிறுமிகளுக்கு தற்காப்புக்கலை பயிற்சி அளிக்க வேண்டும் என்று மத்திய  மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் நிஷாங்க் தெரிவித்துள்ளார்

News image
Updated On :5 டிசம்பர் 2019, 11:58 am

பெண் குழந்தைகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, பள்ளிகளில் சிறுமிகளுக்கு தற்காப்புப் பயிற்சி கட்டாயமாக அளிக்க வேண்டும் என்று மத்திய  மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் நிஷாங்க் வலியுறுத்தியுள்ளார். 

நாடாளுமன்றத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளித்துப் பேசிய அமைச்சர் ரமேஷ் போக்ரியால், 'பெண் குழந்தைகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, அரசு பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை படிக்கும் சிறுமிகளுக்கு தற்காப்புப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. மத்திய அரசின் 'சமாக்ரா சிக்ஷா' திட்டத்தின் கீழ் அரசுப் பள்ளிகளில் இந்தப் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக பள்ளி ஒன்றுக்கு ரூ.3,000 செலவு செய்யப்படுகிறது. மூன்று மாதத்திற்கு ஒருமுறை இந்த நிதி வழங்கப்படுகிறது பெண்கள் மத்தியில் தற்காப்பு மற்றும் சுய மேம்பாட்டுக்கான வாழ்க்கைத் திறன் உள்ளிட்டவை மேம்பட வேண்டும்' என்று தெரிவித்தார். 

Story image

மேலும், சிபிஎஸ்இ பள்ளிகளிலும், மாணவிகளுக்கு தற்காப்புக்கலை பயிற்சி அளிக்க வேண்டியதன் அவசியத்தை மத்திய அரசு கடந்த 2015ம் ஆண்டு முதலே வலியுறுத்தி வருகிறது. அதன்படி, 1ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை உள்ள மாணவிகளுக்கு வருடத்திற்கு இருமுறை ஒரு வார கால அளவிற்கு தற்காப்புப் பயிற்சி அளிக்கப்படுகிறது. அதேபோன்று, கஸ்தூர்பா காந்தி பாலிகா வித்யாலயா பள்ளிகளுக்கும் சிறுமிகளுக்கு பயிற்சி வழங்கப்படுகிறது என்று தெரிவித்தார். 

இதுதவிர, தற்காப்புக் கலைகளான ஜூடோ, டேக்வாண்டோ மற்றும் குத்துச்சண்டை போட்டிகளில் சிறந்து விளங்கும் மாணவிகளுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு, அவர்கள் மாநில மற்றும் தேசிய அளவில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்பதாகக் கூறினார். 

பெண்களின் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில் மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது என்றும் அவர் தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.