கேரளாவில் பள்ளி விழாவில் கலந்துகொண்டு பேசிய ராகுல் காந்தியின் பேச்சை பள்ளி மாணவி ஒருவர் மொழி பெயர்த்தது அம்மாநில மக்களிடையே பரவலாக பேசப்படுகிறது.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், எம்.பியுமான ராகுல் காந்தி, கேரளாவில் காங்கிரஸ் எம்.எல்.ஏ நிதியின் கீழ் கட்டப்பட்ட கருவரகுண்டு அரசுப்பள்ளி ஆய்வகத்தை திறந்து வைப்பதற்காகச் சென்றிருந்தார். அப்போது விழாவில் பேசிய ராகுல் காந்தி, தனது உரையை யாராவது மலையாள மொழியில் மொழிபெயர்க்க முடியுமா? என்று கேட்டார். உடனே, சஃபா பெபின் என்ற மாணவி மாணவர்களின் கரகோஷத்துடன் ராகுலின் பேச்சை மொழி பெயர்க்க முன்வந்தார். ராகுல் காந்தியும் அந்த மாணவியை கைகுலுக்கி வரவேற்றார். தொடர்ந்து, ராகுல் காந்தியின் முழு உரையையும் மிகவும் தெளிவாக மொழி பெயர்த்தார். இறுதியில் ராகுல் காந்தி மாணவி பெபினுக்கு வாழ்த்து கூறினார்.

ராகுலின் பேச்சை மொழி பெயர்த்தது குறித்து மாணவி பெபின், 'நான் இதற்கு முன்னர் இதுபோன்ற எந்த மொழிபெயர்ப்பையும் செய்யவில்லை. நான் மேடைக்குச் சென்று ராகுல் அருகில் நின்று மொழி பெயர்த்தது கனவு போல இருந்தது. என் நண்பர்களின் தூண்டுதலின் பேரில்தான் சென்றேன். ஆனால், மேடையேறிய சில நிமிடங்களில் எனக்கு நம்பிக்கை வரவழைத்துக்கொண்டேன், எனவே, இதனை சிறப்பாக செய்ய முடிந்தது' என்று கூறினார்.
கடந்த ஏப்ரல் - மே மாதங்களில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலின்போது, தமிழகம் மற்றும் கேரளாவிற்கு ராகுல் காந்தி வருகையின்போது கட்சியைச் சேர்ந்தவர்கள் மொழி பெயர்த்தது சர்ச்சைக்குள்ளான நிலையில், பள்ளி மாணவி சிறப்பாக மொழி பெயர்த்ததாக மக்கள் பாராட்டி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
பொறுப்பால் உயரும் பெருமை!
கடைசிப் பந்து சிக்ஸரால் மாறிய ஆட்டத்தின் போக்கு: சூப்பர் ஓவரில் கொல்கத்தா ‘த்ரில்’ வெற்றி!
மேற்கு வங்கம்: திரிணமூல் தொண்டா் வீட்டில் 73 நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல்! என்ஐஏ விசாரணை!!

தொழில்நுட்பத்தை எதிர்கொள்வோம்!
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


