தனது செருப்பை தைப்பதற்காக மாணவர்களை அனுப்பிய அரசுப்பள்ளி ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் கஜுராஹத் பகுதியில் அரசு தொடக்கப்பள்ளி ஒன்று உள்ளது. இங்குள்ள ஆசிரியர் ஒருவர், தனது செருப்பை தைத்து வரச்சொல்லி மூன்று மாணவர்களை கடைக்கு அனுப்பியுள்ளார். மூன்று குழந்தைகள் பையுடன் வந்ததை கவனித்த, அங்குள்ள உள்ளூர் நிருபர் ஒருவர், 'ஏன் பள்ளிக்குச் செல்லவில்லை?' என்று மாணவர்களிடம் கேட்டபோது, ஆசிரியர் ரஜினி குப்தா, தனது செருப்புகளை தைத்துவரச் சொன்னதாக மாணவர்கள் காரணம் கூறியுள்ளனர்.
இந்நிலையில், இதனை வீடியோ எடுத்து மாவட்ட கல்வி அதிகாரி சந்தோஷ் தேவ் பாண்டேவின் கவனத்திற்கு கொண்டு சென்றார் அந்த நிருபர். இதையடுத்து, தற்காலிக ஆசிரியர் ரஜினி குப்தா மற்றும் அவரது மூத்த ஆசிரியர் ரீனா குப்தா ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட கல்வி அதிகாரி உத்தரவிட்டார். மேலும், இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
'குழந்தைகள் படிப்பதற்காகவே பள்ளிக்கு வருகிறார்கள், எந்தவொரு ஆசிரியரோ, ஊழியரோ அவர்களது சொந்த வேலைகளுக்காக மாணவர்களை பயன்படுத்தக் கூடாது. அவ்வாறு நடந்துகொள்ளும் பட்சத்தில் சம்மந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்' என்று எச்சரிக்கை கல்வி அதிகாரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அரசுப்பள்ளிகளில் மாணவர்களை சொந்த வேலைக்கு பயன்படுத்தக்கூடாது என்று அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துவரும் நிலையிலும், இதுபோன்ற நிலை தொடர்ந்து வருவது கண்டிக்கத்தக்கது. அரசுப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் இதனைக் கண்காணிப்பது அவசியம் ஆகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
பொறுப்பால் உயரும் பெருமை!
கடைசிப் பந்து சிக்ஸரால் மாறிய ஆட்டத்தின் போக்கு: சூப்பர் ஓவரில் கொல்கத்தா ‘த்ரில்’ வெற்றி!
மேற்கு வங்கம்: திரிணமூல் தொண்டா் வீட்டில் 73 நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல்! என்ஐஏ விசாரணை!!

தொழில்நுட்பத்தை எதிர்கொள்வோம்!
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


