ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த 6 வயது சிறுமி மர்ம கும்பலால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. நாட்டில் பல்வேறு பகுதிகளில் நடக்கும் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. அதிலும், சமீபத்தில் ஹைதராபாத்தில் பெண் மருத்துவர் கொலை செய்யப்பட்டு எரித்துக்கொல்லப்பட்ட சம்பவம் மக்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், ராஜஸ்தானிலும் 6 வயது சிறுமி ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். ராஜஸ்தானில் டோங்க் மாவட்டம் அலிகார் பகுதியைச் சேர்ந்த 6 வயது சிறுமி அங்குள்ள பள்ளி ஒன்றில் 1-ம் வகுப்பு படித்து வந்தார். சனிக்கிழமை பள்ளிக்குச் சென்ற சிறுமி, மாலையில் வீடு திரும்பவில்லை. பின்னர், சிறுமி காணாமல் போனதாக காவல்துறையில் பெற்றோர்கள் புகார் அளித்துள்ளனர்.
பின்னர், பள்ளிக்கு அருகே உள்ள புதர்களுக்கு இடையே சிறுமி ரத்த வெள்ளத்தில் கொலையுண்டு கிடந்தார். அவரது சீருடை பெல்ட்டினால் கழுத்து நெரிக்கப்பட்டு கொலையுண்டிருந்தார். பின்னர் சிறுமியின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்துள்ளதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மது பாட்டில்கள், தின்பண்டங்கள் மற்றும் இரத்தக் கறைகளும் சம்பவ இடத்தில் காணப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். சிறுமி கொலை செய்யப்பட்டதை கண்டித்து அப்பகுதி மக்கள் போலீசாருடன் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
பொறுப்பால் உயரும் பெருமை!
கடைசிப் பந்து சிக்ஸரால் மாறிய ஆட்டத்தின் போக்கு: சூப்பர் ஓவரில் கொல்கத்தா ‘த்ரில்’ வெற்றி!
மேற்கு வங்கம்: திரிணமூல் தொண்டா் வீட்டில் 73 நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல்! என்ஐஏ விசாரணை!!

தொழில்நுட்பத்தை எதிர்கொள்வோம்!
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

