பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கும் முயற்சியில், இரவில் பெண்களுக்கு இலவச வாகன போக்குவரத்து சேவை வழங்க லூதியானா மாவட்ட காவல்துறை முடிவு செய்துள்ளது.
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. நாட்டில் பல்வேறு பகுதிகளில் நடக்கும் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளன.
இந்நிலையில், பஞ்சாப் லூதியானா காவல்துறை பெண்களின் பாதுகாப்புக்கென ஒரு புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளது. அதன்படி, மாலை அல்லது இரவில் ஆட்டோ, டாக்சி கிடைக்காத பெண்களுக்கு இலவச வாகன போக்குவரத்து சேவை வழங்குகிறது. ஹெல்ப்லைன் எண்களான 1091 மற்றும் 7837018555யை அழைக்கும் பட்சத்தில் காவல்துறை வாகனம் நேரடியாக நீங்கள் இருக்கும் இடத்திற்கு வந்து உங்களை அழைத்துச் செல்லும். இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இந்த இலவச சேவை வழங்கப்படுகிறது.
அதேபோன்று பெண்களுக்கு ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால் அதனைத் தெரிவிக்க, 'shakti App' என்ற செயலியையும் லூதியானா மாவட்ட காவல்துறை அறிமுகம் செய்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
பொறுப்பால் உயரும் பெருமை!
கடைசிப் பந்து சிக்ஸரால் மாறிய ஆட்டத்தின் போக்கு: சூப்பர் ஓவரில் கொல்கத்தா ‘த்ரில்’ வெற்றி!
மேற்கு வங்கம்: திரிணமூல் தொண்டா் வீட்டில் 73 நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல்! என்ஐஏ விசாரணை!!

தொழில்நுட்பத்தை எதிர்கொள்வோம்!
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


