திமுக - காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு - சென்னை வந்தடைந்தார் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால்இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டது மகிழ்ச்சிக்குரிய செய்தி! - கூறியது யார்?

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் கைது குறித்து சிறையில் இருக்கும் ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனர் இந்திராணி முகர்ஜி கேள்வி எழுப்பியுள்ளார். தகவலறிந்த அவர், ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டது மகிழ்ச்சியா

News image
Updated On :31 ஜனவரி 2024, 9:57 am

Muthumari

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் கைது குறித்து சிறையில் இருக்கும் ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனர் இந்திராணி முகர்ஜி கேள்வி எழுப்பியுள்ளார். தகவலறிந்த அவர், ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டது மகிழ்ச்சியான செய்தி என்று தெரிவித்துள்ளார். 

ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனம் ரூ.305 கோடி வெளிநாட்டு முதலீட்டைப் பெற, ப.சிதம்பரத்தின் மகனான கார்த்தி சிதம்பரம், மத்திய நிதியமைச்சகத்தின் கீழ் இயங்கும் அந்நிய நேரடி முதலீட்டு மேம்பாட்டு வாரியத்தின் அனுமதியை பெற்றுத் தந்ததாகவும், இதற்காக ஐ.என்.எக்ஸ் நிறுவனத்திடம் இருந்து கார்த்தி சிதம்பரம் லஞ்சம் பெற்றதாகவும் கூறப்பட்டது. இதில், மிகப்பெரிய அளவில் முறைகேடு நடந்ததாக கடந்த 2017ம் ஆண்டு ப.சிதம்பரத்தின் மீது சி.பி.ஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. 

இந்த வழக்கில், முன்ஜாமீன் கோரி ப.சிதம்பரம் தாக்கல் செய்த மனுவை தில்லி உயர்நீதிமன்றம் கடந்த 20-ஆம் தேதி தள்ளுபடி செய்துவிட்டது. இதை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் ப.சிதம்பரத்தின் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்ட மனுவும் தள்ளுபடி செய்யப்பட, கடந்த 21-ஆம் தேதி இரவு, தில்லியில் உள்ள இல்லத்தில் சிபிஐ அதிகாரிகளால் ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டார். 

பின்னர் தில்லியிலுள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் அவர் வியாழக்கிழமை (ஆக.22) ஆஜர்படுத்தப்பட்டார். அவரை, ஆகஸ்ட் 26-ஆம் தேதி வரை காவலில் வைத்து விசாரிப்பதற்கு  சிபிஐக்கு சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இதன் கால அவகாசம் முடிவடைந்த நிலையில், சிபிஐ அதிகாரிகளின் கோரிக்கைக்கு ஏற்ப, ப.சிதம்பரத்தை மேலும் 4 நாள்களுக்கு (ஆக. 30 வரை) சிபிஐ காவலில் வைத்து விசாரிப்பதற்கு நீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டது. 

முன்னதாக, இந்த வழக்கில் ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவன இயக்குனர் இந்திராணி முகர்ஜி மற்றும் அவரது கணவர் பீட்டர் முகர்ஜியிடமும், சிபிஐ விசாரணை நடத்தி வந்தது. அப்ரூவராக மாற விரும்புவதாக, இந்திராணி முகர்ஜி கூறியதற்கு, டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கியது. தற்போது இந்திராணி முகர்ஜி மும்பையில் பைகுல்லா சிறையில் இருக்கிறார். 

அவர் அங்குள்ள சிறை அதிகாரிகளிடம் ப.சிதம்பரம் குறித்து கேள்வி எழுப்பியுள்ளார். அவர் கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் கூறவே, அதற்கு இந்திராணி முகர்ஜி, 'ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டது மகிழ்ச்சிக்குரிய செய்தி' என்று பதில் தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.