இதனால், ஹரியானாவில் உள்ள பிரபல அரசு மருத்துவமனையான ரோக்டாக்கிற்கு குழந்தையை அழைத்துச் சென்றனர். அங்கு முதற்கட்ட சிகிச்சை அளித்த மருத்துவர்கள், நாய்க்கடிக்கான தடுப்பூசி மருந்து தற்போது இருப்பில் இல்லை என்று கூறி, வெளியே தனியார் மருத்துவமனையில் வாங்கி வரச்சொல்லியுள்ளார். குழந்தையின் தந்தையும் வேறு வழியின்றி, தனியார் மருத்துவமனைக்கு சென்ற போது, நாய்கடிக்கான தடுப்பூசி மருந்து ரூ,4.500 என்று கூறியுள்ளனர். அவரிடம் ரூ.2,000 மட்டுமே இருந்தது. இதனால் தனது மொபைல் போனை அடமானம் வைத்து ரூ.2,500 பெற்று தடுப்பூசிக்கான மருந்தை வாங்கிச் சென்றுள்ளார்.