இலவச கண்புரை அறுவை சிகிச்சை செய்த 11 பேர் தங்களது கண் பார்வையை இழந்துள்ள சோகமான சம்பவம் மத்தியப்பிரதேச மாநிலத்தில் அரங்கேறியுள்ளது.
மத்தியப்பிரதேச மாநிலத்தில் இந்தூரில் உள்ள ஒரு கண் மருத்துவமனையில் 'தேசிய பார்வையின்மை தடுப்பு திட்டம்' நிகழ்வு நடைபெற்றது. இதில், 14 பேருக்கு இலவச கண்புரை அறுவை சிகிச்சை(கேட்டராக்ட்)செய்யப்பட்டது. கடந்த ஆகஸ்ட் 7ம் தேதி அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில், அதற்கு மறுநாளே 14 பேரில் 11 பேர் தங்களது கண் பார்வையினை இழந்துள்ளனர்.
இவர்கள் அனைவரும் தற்போது அதே மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். 'அறுவை சிகிச்சை செய்யப்பட்ட உடனேயே, அவர்களுக்கு கண்களில் நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாகவே அவர்கள் கண் பார்வையை இழந்துள்ளனர். ஆனால், எதனால் நோய்த் தொற்று ஏற்பட்டுள்ளது என மருத்துவர்கள் பரிசோதனை செய்து வருகின்றனர். மேலும், கண்பார்வையினை இழந்தவர்களுக்கு மீண்டும் பார்வை கிடைக்க தேவையான சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து அரசிடமும் நாங்கள் அறிக்கை அளித்துவிட்டோம்' என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
பார்வையினை இழந்த நோயாளி ஒருவர் கூறும் போது, "நாங்கள் கண்பார்வையை சரிசெய்ய வந்த இடத்தில் பார்வையினை இழந்துள்ளோம். தற்போது சிகிச்சை எடுத்து வருவதால், எனக்கு அவ்வப்போது பார்வை தெரிகிறது. முழு பார்வை கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்" என்று கூறினார்.
மற்றொருவர் கூறும்போது, "கண் பார்வையை இழந்ததற்காக எங்களுக்கு கோடிக்கணக்கில் பணம் கொடுத்தாலும் தேவையில்லை. எங்களுக்கு முழு பார்வை கிடைக்கச் செய்தால் போதுமானது. சிறந்த சிகிச்சை அளிக்கும் மருத்துவமனை என்று கேள்விப்பட்டு வந்தோம். எதிர்பாராத விதமாக இப்படி ஆகிவிட்டது" என்று வருத்தத்துடன் தெரிவித்தார்.
இந்த சம்பவம் இந்தூர் மாநில மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தியாகராஜா் 259-ஆவது ஜெயந்தி விழா

வெயில் தாக்கம்: கடலூரில் நுங்கு விற்பனை மும்முரம்! கடந்தாண்டைவிட விலை அதிகம்

வீராம்பட்டினம் கடற்கரையில் மது குடிக்கத் தடை! மீனவ கிராம பஞ்சாயத்தாா் நடவடிக்கை!

நீலகிரி வரையாடு கணக்கெடுப்பு பணிகள் தொடக்கம்
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


