நல்லகண்ணு உடல்நிலை! விஜய் விசாரிப்பு!கூட்டணிக்கு தவெக தயார்! காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர்வகைவகையாக வடை சுடும் இபிஎஸ்: முதல்வர் ஸ்டாலின்காஸா இனப் படுகொலையை பிரதமர் மோடி பேச வேண்டும்: காங்கிரஸ்சூரிய சக்தி மின்தகடு இறக்குமதி! இந்தியா மீது அமெரிக்கா 126% வரி?இந்தியா கூட்டணியை உருவாக்கிய முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு: காங்கிரஸ்மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகை
/

யப்பா என்னா வெள்ளம்? கூரை மீது ஏறி இடம்பிடித்துக் கொண்ட விவிஐபி

கர்நாடக மாநிலத்தில் பெய்த கன மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் ஏராளமான கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

News image
Updated On :31 ஜனவரி 2024, 9:47 am

ANI


பெலகாவி: கர்நாடக மாநிலத்தில் பெய்த கன மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் ஏராளமான கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

ஏராளமான வீடுகள் வெள்ளத்தில் மூழ்கிய நிலையில், ஆற்றங்கரையோரம் உள்ள சுதார் பண்ணைப் பகுதியில், வீடு முழுக்க வெள்ளம் புகுந்து, இன்னும் வெள்ளத்தில் மூழ்காமல் இருக்கும் ஒரு சிமெண்ட் கூரை வீட்டின் மீது, அவ்வழியாக அடித்துச் சென்ற வெள்ளத்தில் சிக்கிய முதலை ஒன்று யப்பா கிடைத்தது ஒரு போக்கிடம் என்று ஏறி இளைப்பாறிக் கொண்டிருக்கும் புகைப்படம் ஏஎன்ஐயில் வெளியிடப்பட்டுள்ளது.

சற்று நேரம் இளைப்பாறிக் கொண்டிருந்த போதே, அக்கம் பக்கத்தில் எல்லாம் இதுபோன்று கூரைகள் மீது தஞ்சம் அடைந்திருந்தவர்கள் எழுப்பிய கூக்குரலில் பயந்து போன அந்த முதலை வெள்ளத்தில் குதித்து தப்பித்தோம் பிழைத்தோம் என்று தலைதெறிக்க ஓடியது.

நல்ல வேளை யாரும் டிக்டாக் விடியோ செய்கிறேன் என்று அதனுடன் விளையாட்டுக்குச் செல்லவில்லை. அதற்குள் அது தப்பித்துக் கொண்டது அந்த விவிஐபி முதலை.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.