/

கங்கை புனித நீர் கொண்டு வந்த முஸ்லிம் இளைஞர் மீது தாக்குதல்

கங்கை புனித நீரை எடுத்து வந்ததற்காக முஸ்லிம் இளைஞர் மற்றும் அவரது குடும்பத்தினர் தாக்கப்பட்டனர்.

News image
Updated On :3 ஆகஸ்ட் 2019, 8:34 am

தனது ஹிந்து நண்பர்களுடன் கன்வார் யாத்திரையில் கலந்துகொண்டு ஹரித்துவாரில் இருந்து கங்கை புனித நீரை எடுத்து வந்ததற்காக முஸ்லிம் இளைஞர் மற்றும் அவரது குடும்பத்தினர் தாக்கப்பட்ட அதிர்ச்சி சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் நடந்துள்ளது.

பாக்பாத் கிராமத்தைச் சேர்ந்த இர்ஷத், கன்வர் யாத்திரையை முடித்துக்கொண்டு தனது கிராமத்தில் உள்ள சிவன் கோயிலுக்கு சென்று கங்கை புனித நீரைக் கொண்டு பூஜை செய்ய சென்றபோது இச்சம்பவம் நடந்துள்ளது. இதையடுத்து அங்குள்ள காவல்நிலையத்தில் இர்ஷத் புகார் அளித்தார். மேலும் இதுகுறித்து அவர் கூறுகையில்,

ஹரித்துவார் புனித யாத்திரை முடித்துக்கொண்டு கங்கை புனித நீரை எடுத்து வந்தது முஸ்லிம் மதத்துக்கு எதிரானது எனக் கூறி பரௌட் பகுதியைச் சேர்ந்த முஸ்லிம்களால் நானும் எனது குடும்பத்தினரும் தாக்கப்பட்டோம். இதில் எனது தந்தைக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது என்றார்.

இர்ஷத் கடந்த சில காலங்களாவே இந்த யாத்திரையில் பங்கு பெற்று வருவதாக பாக்பாத் கிராம மக்கள் தெரிவித்துள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.