கட்சியின் பெயரை மட்டும் விரைவில் அறிவிக்கிறேன்: என் முயற்சியில் எந்தவித மாற்றத்திற்கும் இடமில்லை - சசிகலாராமநாதபுரத்தில் புதிய கட்சி தொடங்கினார் சசிகலா : அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுடன் கொடி அறிமுகம்9 ஆண்டுகளாக அமைதியாக இருந்ததைப்போல இனியும் இருக்க முடியாது : சசிகலாசென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வே
/

தில்லியில் ஆம் ஆத்மியுடன் கூட்டணி இல்லை: காங்கிரஸ் வேட்பாளர்கள் அறிவிப்பு

புது தில்லி மக்களவைத் தேர்தலில் ஆம் ஆத்மியுடன் கூட்டணியில்லை என்று அறிவித்திருக்கும் காங்கிரஸ் 6 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டிலை வெளியிட்டுள்ளது.

News image
Updated On :31 ஜனவரி 2024, 7:43 am

ANI

புது தில்லி: புது தில்லி மக்களவைத் தேர்தலில் ஆம் ஆத்மியுடன் கூட்டணியில்லை என்று அறிவித்திருக்கும் காங்கிரஸ் 6 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டிலை வெளியிட்டுள்ளது.

7 மக்களவைத் தொகுதிகளைக் கொண்ட புது தில்லியில், 6 மக்களவைத் தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டிருக்கிறது காங்கிரஸ்.
புது தில்லி மக்களவைத் தொகுதியில் முன்னாள் அமைச்சர் அஜய் மக்கான் போட்டியிடுகிறார். வடகிழக்கு தில்லி தொகுதியில் தில்லியின் முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் போட்டியிடுகிறார்.

Story image

இது தவிர சாந்தினி சவுக் தொகுதயில் ஜே.பி. அகர்வால், கிழக்கு தில்லியில் அர்விந்தர் சிங் லவ்லி, வடமேற்கு தில்லி (தனி) ராஜேஷ் லிலோதியா, மேற்கு தில்லி மஹாபால் மிஷ்ரா ஆகியோர் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சந்தினி சவுக் தொகுதியில் போட்டியிடுவேன் என்று கூறி வந்த கபில் சிபலுக்கு சீட்டு ஒதுக்கப்படவில்லை.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.