மகளிர் போலீஸ்களுக்காக மும்பை காவல்நிலையங்களில் சானிடரி நாப்கின் திட்டத்தை மாநகர துணை ஆணையர் செவ்வாய்கிழமை தொடங்கி வைத்தார்.
மும்பை பெண் காவலர்களின் நலத்திட்டம் தொடர்பாக என்ஜிஓ அமைப்பின் துணையுடன் முதல்கட்டமாக மாநகரம் முழுவதும் உள்ள 93 காவல்நிலையங்களில் 140 சானிடரி நாப்கின் தானியங்கி இயந்திரம் பொருத்தப்பட்டுள்ளது. சுகாதாரத்தை கருத்தில் கொண்டு மும்பை போலீஸ் தரப்பில் இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தை தனது மனைவியுடன் தொடங்கி வைத்த பின்னர் மும்பை மாநகர போலீஸ் துணை ஆய்வாளர் நியதி தக்கர் கூறுகையில்,
மும்பை போலீஸில் மொத்தம் 20 சதவீதம் பெண் காவலர்களால் நிரம்பியுள்ளது. எனவே பணியிடத்தில் அவர்களுக்கு போதிய அடிப்படை வசதியாக, மாதவிடாய் காலங்களில் அடிப்படை சுகாதாரத்தை ஏற்படுத்தி தரும் வகையில் கடந்த வாரம் காவல் நிலைய தலைமையகத்தில் முதல் சானிடரி நாப்கின் தானியங்கி இயந்திரம் பொருத்தப்பட்டது.
பின்னர் தற்போது மும்பையின் 93 காவல்நிலையங்களுக்கு இது விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இதை முன்மாதிரியாக கொண்டு அனைத்து அரசு மற்றும் தனியார் நிறுவனங்களும் பெண்களின் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இதனை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறேன் என்று தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பிரதமா் மோடியைப் போல பணக்காரா்களுக்கே மம்தா உதவுகிறாா்: ராகுல்

உ.பி.: கங்கை விரைவுச் சாலையை ஏப். 29-இல் திறந்துவைக்கிறாா் பிரதமா்

தோ்தல் பணியில் நோ்மையற்ற நடத்தை: மேற்கு வங்க காவல்துறை அதிகாரிகள் 5 போ் இடைநீக்கம்

1 - 8 வகுப்பு இறுதித் தோ்வு மதிப்பெண்: ஏப். 30-க்குள் பதிவேற்ற உத்தரவு
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


