தலைவருடன் சென்ற தொண்டர்கள் மீது பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் தடியடி நடத்திய விடியோ காட்சி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலத்தில் சட்டப்பேரவை மற்றும் மக்களவைத் தேர்தல் ஆகியவை இணைந்து நடைபெறவுள்ளது. இதையடுத்து ஆளும் தெலுங்கு தேசம், எதிர்கட்சியான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி, கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள மைலாவரம் பகுதியில் புதன்கிழமை பிரசாரம் செய்தார். ஆளும் தெலுங்கு தேசம் கட்சி மற்றும் முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆகியோர் குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். ஊடகமும், போலீஸாரும் சந்திரபாபு நாயுடுவுக்கு ஆதரவாக செயல்படுவதாக குற்றம்சாட்டினார்.
அப்போது, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினர் போலீஸாருக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் இருதரப்புக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டுள்ளது. மேலும் போலீஸார் மீது ஒய்எஸ்ஆர் கட்சியினர் கல்வீசி தாக்கியதாக கூறப்படுகிறது.
இதையடுத்து பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். இந்த விடியோ சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
வேட்டுவம் வெளியீடு எப்போது?
பெட்ரோல் விலை கடுமையாக உயரும்: ராகுல் காந்தி
லுங்கி இங்கிடி நலமுடன் உள்ளார்: ஐபிஎல் நிர்வாகம் தகவல்

மது, சூதாட்ட விளம்பரங்களில் நடிக்க மாட்டேன்: ஜிவி பிரகாஷ்
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


