ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
/

காங்கிரஸின் 687 பக்கங்களை முடக்கிய ஃபேஸ்புக் பாஜக மீது பாராமுகமாக இருக்கிறதா?

மக்களவைத் தேர்தல் தொடர்பான தங்களது பாதுகாப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, காங்கிரஸ் கட்சியோடு தொடர்புடைய 687 கணக்குகளை முடக்கி ஃபேஸ்புக் நிர்வாகம் நடவடிக்கை எடுத்ததாக செய்திகள் வெளியாகின.

News image
Updated On :3 ஏப்ரல் 2019, 7:38 am

புது தில்லி: மக்களவைத் தேர்தல் தொடர்பான தங்களது பாதுகாப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, காங்கிரஸ் கட்சியோடு தொடர்புடைய 687 கணக்குகளை முடக்கி ஃபேஸ்புக் நிர்வாகம் நடவடிக்கை எடுத்ததாக செய்திகள் வெளியாகின.

ஆனால் இதுபோன்று பாஜக தொடர்பான போலி கணக்குகளை முடக்கியதாக இதுவரை ஃபேஸ்புக் நிர்வாகத்திடம் இருந்து எந்த கணக்கும் வரவில்லை. 

பாஜகவின் போலி ஃபேஸ்புக் கணக்குகளை முடக்குவதில், நிர்வாகம் எந்த கவனமும் செலுத்தவில்லை என்பது ஃபேஸ்புக் நிறுவனத்தின் இணையப் பாதுகாப்பு கொள்கை வகுக்கும் குழுவின் தலைவரான நாதனைல் க்ளெய்ச்சர் அறிக்கையில் தெளிவாகத் தெரிகிறது.

இதுதொடர்பாக நாதனைல் க்ளெய்ச்சர் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், காங்கிரஸ் கட்சியின் தகவல் தொழில் நுட்பப் பிரிவோடு தொடர்புடைய தனி நபர்கள் நிர்வகித்து வந்த 687 ஃபேஸ்புக் பக்கங்கள் மற்றும் கணக்குகள் தற்போது முடக்கப்பட்டுள்ளது.

இவர்கள் இந்த போலி கணக்குகளைப் பயன்படுத்தி திட்டமிட்டு ஒருங்கிணைந்த விஷமச் செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளனர். போலிக் கணக்குகள் மூலம் பல்வேறு குழுக்களில் இணைந்து அங்கு தகவல்களைப் பகிர்ந்து கொண்டு அதன் மூலம் தங்கள் பக்கங்களுக்கு ஆட்களை வரவழைத்துள்ளனர்.

அவர்கள் பெரும்பாலும் உள்ளூர் செய்திகள், அரசியல் செய்திகள், குறிப்பாக மக்களவைத் தேர்தல் தொடர்பான செய்திகள், வேட்பாளர்கள் பற்றிய கருத்துக்கள், காங்கிரஸ் கட்சியின் பார்வைகள், எதிர்க்கட்சிகள் குறிப்பாக பாஜக மீதான விமர்சனங்கள் ஆகியவற்றைத்தான் பகிர்ந்துள்ளார்கள்.

அவர்கள் தங்கள் அடையாளங்களை மறைக்க முயன்றாலும், எங்களது ஆய்வின் மூலம் அவர்கள் காங்கிரஸ் கட்சியின் தகவல் தொழில் நுட்பப் பிரிவோடு தொடர்புடையவர்கள் என்பது தெரிய வந்துள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.    


உலகின் மிக பிரபலமான சமூக வலைதளங்களில் ஃபேஸ்புக்கும் ஒன்று. ஆனால் பல்வேறு சமயங்களில் பயனாளர்களின் அந்தரங்கத் தகவல்கள் தொடர்பான நடவடிக்கைகள் மற்றும் சில பொதுவான விஷயங்களில் அதன் நிலைப்பாடுகள் பெரும்பாலும் சர்ச்சைகளுக்கு உள்ளாகியிருக்கிறது.

குறிப்பாக இந்தியாவில் மக்களவைத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில் ஃபேஸ்புக் வழியாக, திட்டமிட்டு ஒருங்கிணைந்த விஷமச் செயல்களில் ஈடுபடும் ஃபேஸ்புக் பக்கங்கள் மற்றும் குழுக்களை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை அந்நிறுவனம் எடுத்து வருகிறது.   

இந்நிலையில் மக்களவைத் தேர்தல் தொடர்பான தங்களது பாதுகாப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, காங்கிரஸ் கட்சியோடு தொடர்புடைய 687 கணக்குகளை முடக்கி ஃபேஸ்புக் நிர்வாகம் நடவடிக்கை எடுத்திருப்பதாகக் கூறும் பட்சத்தில் பாஜகவுக்கு தொடர்புடைய ஃபேஸ்புக் கணக்குகளை முடக்காதது ஏன் என்று கேள்வி எழுவது சகஜம்தானே? 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.