/

ராணுவத்தில் பணியாற்றும் அதிகாரிகள் பலரும் மணிப்பூரைச் சேர்ந்தவர்கள்: மாநில முதல்வர்

தேசிய பாதுகாப்பில் மிக  முக்கியப் பங்கு வகிப்பவர்களாக மணிப்பூர் மக்கள் திகழ்வதாக அம்மாநில முதல்வர் பிரேன் சிங் தெரிவித்துள்ளார்.

News image
Updated On :30 ஜனவரி 2024, 4:56 pm

UNI


இம்பால்: தேசிய பாதுகாப்பில் மிக  முக்கியப் பங்கு வகிப்பவர்களாக மணிப்பூர் மக்கள் திகழ்வதாக அம்மாநில முதல்வர் பிரேன் சிங் தெரிவித்துள்ளார்.

இந்திய ராணுவத்தில் பணியாற்றும் ஏராளமான அதிகாரிகள் மணிப்பூரைச் சேர்ந்தவர்களாக இருப்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்திய ராணுவத்தில் பணியாற்றும் இரண்டு லியூடினென்ட் ஜெனரல்கள் மணிப்பூரைச் சேர்ந்தவர்கள் என்பதில் மாநிலம் பெருமை கொள்வதாகவும், மணிப்பூரைச் சேர்ந்த சுமார் 300க்கும் மேற்பட்டோர் ராணுவ அதிகாரிகளாகப் பணியாற்றி நாட்டின் பாதுகாப்புக்கு உறுதுணையாக உள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.