புது தில்லி: குடிமக்கள் அனைவருக்கும் அதிவேக இணையசேவை வழங்குவதை அடிப்படையாகக் கொண்ட புதிய தொலை தொடர்பு கொள்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
தேசிய மின்னணு தொலைத்தொடர்பு கொள்கை - 2018 என்று பெயரிடப்பட்டுள்ள இக்கொள்கையினை, முதலில் இவ்வாண்டு மே மாதம் மத்திய அரசு வரைவாக வெளியிட்டது. பின்னர் தேசிய தொலைத்தொடர்பு ஆணையம் இவ்வாண்டு ஜூலையிவ் இதற்கு ஒப்புதல் அளித்தது.
அனைவருக்கும் பொதுவாக 50 எம்பிபிஎஸ் (மெகா பைட் பெர் செகண்ட்) வேகத்தில் இணைய சேவை வழங்குவதையும், ரூ. 1 லட்சம் கோடி அளவில் புதிய முதலீடுகளை வரவழைப்பதையும் இது அடிப்படையாகக் கொண்டுள்ளது.
மத்திய அமைச்சரவைக்கு கூட்டத்திற்குப் பின்னர் இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய, மத்திய தொலைதொடர்புத் துறை அமைச்சர் மனோஜ் சின்ஹா கூறியதாவது:
இந்திய குடிமக்கள் அனைவருக்கும் அதிவேக இணையசேவை வழங்குவதும், 40 லட்சம் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதும் இக்கொள்கையின் செயல் திட்டங்களிலொன்றாகும்.
எங்கும் எளிதில் கிடைக்குமாறும் பாதுகாப்பானதும் அனைவரும் பயன்படுத்தும் விலையிலும் அமைந்த மின்னணு தொலைத்தொடர்பு சேவைகளை வழங்குவதும் இதன் நோக்கம்.
அதேபோல் 2020-ஆம் ஆண்டுவாக்கில் 1 ஜிபிபிஎஸ் (ஜிகா பைட் பெர் செகண்ட்) வேகத்திலும், 2020- ஆம் ஆண்டுவாக்கில் 10 ஜிபிபிஎஸ் (ஜிகா பைட் பெர் செகண்ட்) வேகத்திலும் இணைய சேவைகள் இதன் மூலம் வழங்கப்படும்.
அத்துடன் உலக நாடுகளிடையே தகவல் தொடர்பு மற்றும் தொலை தொடர்பு சேவை குறியீட்டு எண் வரிசையில், இந்தியாவை முதல் 50 இடங்களுக்குள் கொண்டு வ்ருவதையும் மனதில் கொண்டு இந்த் கொள்கை வடி வமைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

விழுப்புரத்தில் இன்று திருநங்கைகளுக்கான அழகிப் போட்டி

தியாகராஜா் 259-ஆவது ஜெயந்தி விழா

வெயில் தாக்கம்: கடலூரில் நுங்கு விற்பனை மும்முரம்! கடந்தாண்டைவிட விலை அதிகம்

வீராம்பட்டினம் கடற்கரையில் மது குடிக்கத் தடை! மீனவ கிராம பஞ்சாயத்தாா் நடவடிக்கை!
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


