பனாஜி: கோவாவில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் இருவர் ராஜிநாமா செய்து விட்டு தில்லி விரைந்திருப்பதால் அவர்கள் பாஜகவில் சேர இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.
கோவாவில் பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. மொத்தம் 40 உறுப்பினர்களைக் கொண்ட சட்டப் பேரவையில், 14 பாஜக உறுப்பினர்கள் உட்பட 23 பேரின் ஆதரவுடன் அந்த ஆட்சி நடைபெற்று வருகிறது. காங்கிரசுக்கு 16 உறுப்பினர்கள் உள்ளார்.
இந்நிலையில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் இருவர் ராஜிநாமா செய்து விட்டு தில்லி விரைந்திருப்பதால் அவர்கள் பாஜகவில் சேர இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.
வடக்கு கோவாவின் மன்றேம் தொகுதி காங்கிரஸ் உறுப்பினரான தயாநந்த் சோப்டே (54) மற்றும் தெற்கு கோவாவின் ஷிரோடா தொகுதியிலிருந்து தேர்வு செய்யப்பட்டவரான சுபாஷ் ஷிரோத்கர் (66) ஆகிய இருவரும்தான் தற்போது தங்கள் பதவியை ராஜிநாமா செய்துள்ளனர்.
இவர்கள் தங்களது ராஜிநாமா கடிதத்தினை சட்டப்பேரவை சபாநாயகர் பிரமோத் சாவந்த்துக்கு பேக்ஸில் அனுப்பி வைத்துள்ளனர். அவர்களது ராஜிநாமா கடிதம் கிடைத்துள்ளதாக சபாநாயகரும் உறுதி செய்துள்ளார்.
கோவா மாநில முதல்வரான மனோகர் பாரிக்கர் தற்போதுஉடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அரசியல் நடவடிக்கைகள் சூடு பிடித்து வருகின்றன.
ராஜிநாமா கடிதம் அனுப்பியுள்ள இருவரும் திங்கள் இரவே தில்லிக்கு புறப்பட்டுச் சென்றுள்ளதால், அவர்கள் தில்லியில் பாஜக தேசியத் தலைவர் அமித் ஷாவை சந்தித்து பாஜகவில் சேர உள்ளதாகவும், விரைவில் அவர்கள் இருவரும் காங்கிரசில் இருந்து விலகும் அறிவைப்பு வெளிவரும் என்றும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தேர்தலுக்குப் பிறகும் மேற்கு வங்கத்தில் மத்திய படைகள் : அமித் ஷா
திரிணமூல் கோட்டையில் தேர்தல்! 2-ம் கட்ட வாக்குப்பதிவு ஏன் முக்கியம்? உண்மையில் யாருக்கு சவால்?

ஆம் ஆத்மியில் 'நச்சுத்தன்மை' வாய்ந்த பணிச்சூழல்! மனம்திறந்த ராகவ் சத்தா!

இரு மலர்கள் தொடருக்கு குவியும் வாழ்த்து!
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


