ஸ்ரீநகர்: பேச்சுவார்த்தை நடத்தப்படாவிட்டால் காஷ்மீரில் ரத்தம் சிந்துவது தொடரும் என்று காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெஹபூபா முப்தி தெரிவித்துள்ளார்.
காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள லோலாப் பகுதியைச் சேர்ந்தவர் மனன் பஷீர் வானி. இவர் அலிகார் இஸ்லாமிய பல்கலையில் ஆய்வு முனைவர் பட்டம் பெற்றவர். இவர் இந்த ஆண்டு ஜனவரியில் ஹிஸ்புல் முஜாஹிதீன் தீவிரவாத இயக்கத்தில் இணைந்து விட்டார். அத்துடன் குப்வாரா பகுதி பொறுப்பாளராகவும் செயல்பட்டு வந்தார். இவரும் மற்றொரு தீவிரவாதியும் வியாழனன்று குப்வாரா மாவட்டம் சத்குண்ட் கிராமத்தில் பாதுகாப்பு படையினருடன் நடந்த மோதலில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெஹபூபா முப்தி, 'பேச்சுவார்த்தை நடத்தப்படாவிட்டால் காஷ்மீரில் ரத்தம் சிந்துவது தொடரும்' என்று தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது:
இன்று ஆய்வு முனைவர் பட்டம் பெற்ற ஒருவர் வாழ்வை விடுத்து சாவைத் தேர்வு செய்து என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். ஒவ்வொரு நாளும் படித்த இளைஞர்களை இழந்து கொண்டிருப்பதால், இது முழுமையாக நம்முடைய இழப்புதான்
நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் இந்த சூழ்நிலையின் தீவிரத்தை உணர்ந்து கொள்ள இது முக்கியமான நேரம். இதற்கு ஒரு தீர்வு காணும் விதமாக, இந்த பிரச்னையில் தொடர்புடைய பாகிஸ்தான் உள்ளிட்ட அனைத்து தரப்பினரையும் ஒருங்கிணைத்து பேச்சு வார்த்தை துவங்கப்படாவிட்டால் காஷ்மீரில் ரத்தம் சிந்துவது தொடரும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை



