பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள்: அதிகாரபூா்வ விவரம் வெளியாவதில் தாமதம் கேரளம்: புற ஊதா கதிா்வீச்சு அதிகரிப்பு! மக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தல்!தலைமைத் தோ்தல் ஆணையரை நீக்கக்கோரி மாநிலங்களவையில் எதிா்க்கட்சிகள் புதிய நோட்டீஸ்டிசம்பரில் இருந்து சுங்கச் சாவடிகளில் இடையூறற்ற சேவை: நிதின் கட்கரி சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு: 6.68 லட்சம் மாணவா்கள் விண்ணப்பம்பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!
/

'நாகாலாந்தின் காந்தி' நட்வர் தக்கர் உடல்நலக் குறைவால் மரணம் 

'நாகாலாந்தின் காந்தி' என்று புகழப்பட்ட காந்தியவாதியான நட்வர் தக்கர் உடல்நலக் குறைவால் ஞாயிறன்று மரணமடைந்தார். 

News image
Updated On :8 அக்டோபர் 2018, 10:21 am

கெளஹாத்தி:  'நாகாலாந்தின் காந்தி' என்று புகழப்பட்ட காந்தியவாதியான நட்வர் தக்கர் உடல்நலக் குறைவால் ஞாயிறன்று மரணமடைந்தார். 

மஹாராஷ்டிரா மாநிலத்தின் தஹானு பகுதியில் பிறந்தவரான நட்வர் தக்கர் காந்தியக் கொள்கைகளில் மிகுந்த ஈடுபாடுள்ளவர். அவற்றைப் பரப்புவதையே தனது வாழ்நாள் நோக்கமாக கொண்டு செயல்பட்டு வந்தவர். 1955-ஆம் ஆண்டு தனது வேலை நிமித்தம் நாகாலாந்தின் சுச்சுயும்லங் பகுதிக்கு வந்தவர், தொடர்ந்து அப்பிராந்திய மக்களின் மேம்பாட்டிற்காக தன்னை அர்பணித்துக் கொண்டு செயல்பட்டு வந்தார். 

நாகா பிரிவினைவாதிகளின் ஆதிக்கம் அதிகமாக இருந்த அந்த காலகட்டத்தில் தொடர்ந்த அவரது காந்திய நோக்கிலான செயல்பாடுகளின் மூலம் மக்களின் நற்பெயரைப் பெற்றார் அத்துடன் அவருக்கு 'நாகாலாந்தின் காந்தி' என்ற அடைமொழி அவருக்கு வழங்கப்பட்டது. அத்துடன் அவருக்கு பத்மஸ்ரீ விருதும் வழங்கப்பட்டது.   

தற்போது 86 வயதாகும் அவர் செப்டம்பர் 9-ஆம் தேதியன்று உடல்நலக்குறைவால் திமாபுர் பகுதியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் 19-ஆம் தேதியன்று அஸ்ஸாமின் தலைநகரான கெளஹாத்தியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.  

தொடர்ந்து அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த பொழுதும், நீடித்த உடல்நலக் குறைவால் அவர் ஞாயிறன்று காலை மரணமடைந்தார். அவருக்கு மனைவியும், மகனும் 
இரண்டு மகள்களும் உள்ளனர்.    

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.