புதிய கட்சி தொடங்கினார் சந்திரசேகர் ராவின் மகள் கவிதா! தமிழ்நாட்டில் எந்த வாக்குச்சாவடியிலும் மறு வாக்குப்பதிவு இல்லை! - தேர்தல் ஆணையம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள்: அதிகாரபூா்வ விவரம் வெளியாவதில் தாமதம் கேரளம்: புற ஊதா கதிா்வீச்சு அதிகரிப்பு! மக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தல்!
/

தெலங்கானா: பாதுகாப்புப் பணியோடு மனிதநேயத்தையும் வென்ற காவலர்

காவலர் தேர்வுக்கான எழுத்துத் தேர்வை எழுத வந்த பெண்ணின் கைக் குழந்தையை, பாதுகாப்புப் பணிக்கு வந்திருந்த தலைமைக் காவலர் பார்த்துக் கொண்டது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

News image
Updated On :4 அக்டோபர் 2018, 7:25 am


மெஹ்பூப்நகர்: காவலர் தேர்வுக்கான எழுத்துத் தேர்வை எழுத வந்த பெண்ணின் கைக் குழந்தையை, பாதுகாப்புப் பணிக்கு வந்திருந்த தலைமைக் காவலர் பார்த்துக் கொண்டது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

தெலங்கானாவின் மெஹ்பூப் நகரில் உள்ள பாய்ஸ் ஜூனியர் கல்லூரியில் கடந்த ஞாயிறன்று காவலர் பதவிக்கான எழுத்துத் தேர்வு நடைபெற்றது.

பாதுகாப்புப் பணியில் ஈடுபட கல்லூரிக்கு வந்த தலைமைக் காவலர் முஜீப்-உர்-ரெஹ்மானுக்கு கூடுதலாக ஒரு பணி சேர்ந்து கொண்டது. அது என்னவென்றால், தேர்வெழுத கைக் குழந்தையோடு வந்த பெண் தேர்வெழுதி முடிக்கும் வரை அந்த குழந்தையை பார்த்துக் கொள்ளும் பொறுப்புதான் அது.

குழந்தையை பெற்றுக் கொண்ட ரெஹ்மான், அதனை பாசத்தோடும், பரிவோடும் பார்த்துக் கொண்டதும், அதன் அழுகையை நிறுத்த முயற்சித்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.