புதிய கட்சி தொடங்கினார் சந்திரசேகர் ராவின் மகள் கவிதா! தமிழ்நாட்டில் எந்த வாக்குச்சாவடியிலும் மறு வாக்குப்பதிவு இல்லை! - தேர்தல் ஆணையம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள்: அதிகாரபூா்வ விவரம் வெளியாவதில் தாமதம் கேரளம்: புற ஊதா கதிா்வீச்சு அதிகரிப்பு! மக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தல்!
/

கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் காலவரையற்ற இட  ஒதுக்கீடு என்பது சரியாக இருக்குமா?: கேள்வி எழுப்பும் சபாநாயகர் 

கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் காலவரையற்ற இட  ஒதுக்கீடு என்பது சரியாக இருக்குமா என்று மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் கேள்வி எழுப்பியுள்ளார். 

News image
Updated On :1 அக்டோபர் 2018, 9:36 am

ராஞ்சி: கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் காலவரையற்ற இட ஒதுக்கீடு என்பது சரியாக இருக்குமா என்று மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் கேள்வி எழுப்பியுள்ளார். 

மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடைபெற்ற 'லோக் மந்தன்' என்னும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியாதவது:

கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் காலவரையற்ற இட  ஒதுக்கீடு என்பது சரியாக இருக்குமா என்பது பற்றி நாம் யோசிக்க வேண்டும். இந்திய அரசியலை அமைப்புச் சட்டத்தை உருவாக்கிய குழுவின் தலைவரான அம்பேத்கர் கூட, இடஒதுக்கீடு என்பது 10 வருடங்களுக்கு மட்டும் அளிக்கப்பட்டால் போதும் என்றுதான் தெரிவித்தார். 

அதற்குள் நாட்டில் ஒரு சரிசமமான வளர்ச்சி உருவாகும் என்றவர் கணித்தார். ஆனால் அது நடக்கவில்லை. இப்போது வரை கூட நாடாளுமன்றத்தில் உள்ளவர்களால் இட  ஒதுக்கீடு என்பது 10 வருடங்களுக்கு ஒரு முறை அடுத்த 10 வருடங்களுக்கும் நீட்டிக்கபப்டுகிறது.    

இட  ஒதுக்கீடு என்பது மட்டுமே மக்களை மேம்படுத்தவோ அல்லது நாட்டின் சமூக பொருளாதார நிலையையோ மாற்றி விட முடியாது. 

இவ்வாறு அவர் பேசினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.