புதிய கட்சி தொடங்கினார் சந்திரசேகர் ராவின் மகள் கவிதா! தமிழ்நாட்டில் எந்த வாக்குச்சாவடியிலும் மறு வாக்குப்பதிவு இல்லை! - தேர்தல் ஆணையம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள்: அதிகாரபூா்வ விவரம் வெளியாவதில் தாமதம் கேரளம்: புற ஊதா கதிா்வீச்சு அதிகரிப்பு! மக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தல்!
/

காற்று மாசு எதிரொலி: மின்சார வாகன திட்டத்துக்கு தில்லி அரசு அறிவிப்பு

காற்று மாசு எதிரொலி காரணமாக மின்சார வாகன திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக தில்லி அரசு செவ்வாய்கிழமை அறிவித்துள்ளது. 

News image
Updated On :28 நவம்பர் 2018, 11:14 am

காற்று மாசு எதிரொலி காரணமாக மின்சார வாகன திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக தில்லி அரசு செவ்வாய்கிழமை அறிவித்துள்ளது. 

தில்லியில் ஒவ்வொரு நாளும் காற்றின் மாசு அளவு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் அங்கு சுவாசிப்பதற்கு மக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர். இந்த காற்று மாசுக்கு வாகன போக்குவத்தும் அங்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இந்நிலையில், மின்சார வாகன திட்டம் 2018 தில்லி அரசால் செவ்வாய்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் வருகிற 2023-ஆம் ஆண்டு மின்சாரத்தில் இயங்கு வாகனத்தின் பயன்பாட்டினை 25 சதவீதம் அதிகரிக்கும் வகையில் இதனை திட்டமிட்டுள்ளனர். 

தில்லி மாசுக்கு வாகன பயன்பாடும் 30 சதவீதம் காரணமாக உள்ளது. எனவே அதை குறைக்கும் நோக்கத்தோடு இந்த திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்மூலம் சுவாச சிக்கல்களை குறைக்க முடியும் என நம்புகிறோம். மின் இரு சக்கர வாகனங்களுக்கு ரூ.22 ஆயிரம் மானியம் வழங்கப்படும். மின் டாக்ஸி வாகனங்களுக்கு இலவச பதிவும், ஒவ்வொரு சவாரிக்கும் ரூ.10, ஒவ்வொரு 3 கி.மீ. ஒரு சார்ஜிங் பங்க் ஆகியவை தில்லி முழுவதும் ஏற்படுத்தப்படும் என தில்லி சாலைப் போக்குவரத்துத்துறை அமைச்சர் கைலாஷ் கெலாட் தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.