போலீஸ் வாகனத்தில் முதல்வர் சந்திரசேகர ராவின் டிஆர்எஸ் கட்சிக் கொடி பறந்த விவகாரம் தெலங்கானாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஹைதராபாத்தில் உள்ள உப்பல் பிரதான சாலையில் நின்றுகொண்டிருந்த போலீஸ் வாகனத்தில் சில அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் அங்கு ஆளும் கட்சியாக உள்ள தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதியின் கட்சிக் கொடியை கட்டி பறக்க விட்டனர். மேலும் அதனை தங்கள் செல்ஃபோனில் படம்படித்தனர். இச்சம்பவம் தொடர்பான விடியோவும் சற்று நேரத்தில் வைரலாகி அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பின்னர் இதுகுறித்து உயரதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். முதல்கட்டமாக தனது வாகனத்தை சரியாகக் கண்காணிக்காமல் அக்கறையின்றி பணி செய்ததாகக் கூறி அப்போலீஸ் வாகனத்தின் ஓட்டுநர் பணியிடை மாற்றம் செய்யப்பட்டார். மேலும் அந்த மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இருப்பினும், சில பழைய தொகுப்புகளை ஒன்றிணைத்து மார்ஃபிங் செய்து இதுபோன்று போலீஸ் மீது அவதூறு பரப்பும் விதமாக சில விஷமிகள் செயல்படுவதாக தெலங்கானா போலீஸ் கமிஷனர் மகேஷ் எம்.பகவத் தெரிவித்தார். அதுமட்டுமல்லாமல் தெலங்கானா போலீஸ் நாட்டில் முதலிடத்தில் இருப்பதாகவும், மக்கள் நலனில் கவனம் செலுத்தி வருவதாகவும் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தேர்தலுக்குப் பிறகும் மேற்கு வங்கத்தில் மத்திய படைகள் : அமித் ஷா
திரிணமூல் கோட்டையில் தேர்தல்! 2-ம் கட்ட வாக்குப்பதிவு ஏன் முக்கியம்? உண்மையில் யாருக்கு சவால்?

ஆம் ஆத்மியில் 'நச்சுத்தன்மை' வாய்ந்த பணிச்சூழல்! மனம்திறந்த ராகவ் சத்தா!

இரு மலர்கள் தொடருக்கு குவியும் வாழ்த்து!
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


