மும்பை: விமானத்தில் கூடுதலாக ஒரு கோப்பை ஒயின் கொடுக்காததால் ஏர் இந்தியா ஊழியருடன் அயர்லாந்து பெண் ஒருவர் சண்டையிட்ட சம்பவம் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சனிக்கிழமையன்று லண்டனில் இருந்து மும்பை வந்த ஏர் இந்தியா விமானத்தில்தான் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. அந்த விமானத்தில் அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த பெண் சர்வதேச கிரிமினல் வழக்கறிஞர் ஒருவாறு பயணம் செய்திருக்கிறார். வழக்கமாக சர்வதேச விமானங்களில் பயணிகளுக்கு மது வழங்கப்படுவது வழக்கம். அதன்படி அந்த பெண் வழக்கறிஞர் விமான நிறுவன பெண் ஊழியரிடம் ஓயின் (திராட்சை ரசம்) கேட்டுள்ளார். அவருக்கு அனைவருக்கும் வழங்கப்படும் அளவில் மது வழங்கப்பட்டுள்ளது.
ஆனால் அந்தப் பெண் கூடுதலாக ஒரு கோப்பை மது கேட்டுள்ளார். அதனை ஏர் இந்தியா நிறுவன ஊழியர் மறுக்கவே, அந்தப் பெண் ஒழியர்களிடம் அவர் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது அவர் சரளமாக கெட்ட வார்த்தைகளையும் அவதூறுகளையும் ஊழியர்களை நோக்கி வாரி இறைத்துள்ளார். அத்துடன் கோபத்துடன் பெண்ணைத் தாக்க முயன்றவரை, ஆண் ஊழியர்கள் சமாதானப்படுத்தினர்.
அப்போது எடுக்கப்பட்ட விடியோ தற்போது இணையதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. ஆனால் ஏர் இந்தியா விமான நிறுவனத்தில் இருந்து அறிக்கை எதுவும் வெளியிடப்படவில்லை.
விடியோ: நன்றி- டைம்ஸ் ஆப் இந்தியா இணைய தளம்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மேற்கு வங்கத்தில் ராஜ்நாத் சிங் சாலைவலம்!

முதலீடு செய்யப் போகிறீர்களா? இந்த 10 விஷயங்களைத் தெரிந்துகொள்ளுங்கள்!

தேனியில் பட்டாசு ஆலையில் வெடி விபத்து: 2 பேர் பலி

நீரைக் கண்ட குழந்தைபோல்.. குதூகலமாக ஆட்டம் போட்ட கோயில் யானை பிரக்ருதி!
வீடியோக்கள்

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை


