காந்திநகர்: குஜராத்தில் அமைந்துள்ள உலகின் உயரமான படேல் சிலைக்கு அருகில் டிசம்பர் மாதம் காவல்துறை இயக்குநர்கள் மாநாடு நடக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குஜராத்தின் சரோவர் நீர்த்தேக்கம் அருகே 182 மீட்டர் (597 அடி) உயரத்தில் மிகப் பிரம்மாண்டமான படேல் சிலை அமைக்கப்பட்டுள்ளது. அதற்கான கட்டுமானப் பணிகள் 2015 ஆம் ஆண்டு டிசம்பரில் தொடங்கி 33 மாதங்களில் நிறைவடைந்தன.
சுமார் ரூ.3 ஆயிரம் கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ள இந்தச் சிலையின் கட்டுமானத்துக்குகு 70,000 டன் சிமெண்ட், 18,500 டன் இரும்பு கம்பிகள், 6,500 டன் இரும்பு கட்டுமான பொருள்கள், 1,700 டன் வெண்கலம் உள்ளிட்டவை பயன்படுத்தப்பட்டுள்ளன.
இதையடுத்து, உலகிலேயே உயரமான சிலையாக கருதப்பட்டு வந்த சீனாவின் "ஸ்பிரிங் டெம்பிள்' புத்தர் சிலையை பின்னுக்குத் தள்ளி சர்தார் வல்லபபாய் படேல் சிலை புதிய சாதனையை படைத்தது.
இந்நிலையில் உலகின் உயரமான படேல் சிலைக்கு அருகில் டிசம்பர் மாதம் காவல்துறை இயக்குநர்கள் மாநாடு நடக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுதொடர்பாக குஜராத் மாநில உள்துறை அமைச்சர் பிரதாப்சின் ஜடேஜா தெரிவித்துள்ள தகவல் பின்வருமாறு:
படேல் சிலை அமைந்துள்ள பகுதிக்கு அருகில் உள்ள கேவாடியா என்னும் இடத்தில் வரும் டிசம்பர் 20 முதல் 22-ஆம் தேதி வரை, வருடாந்திர காவல்துறை இயக்குநர்கள் மாநாடு நடைபெற உள்ளது.
நாடு முழுவதிலும் இருந்து காவல்துறை இயக்குநர்கள் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் இம்மாநாட்டில் கலந்து கொள்ளவுள்ளனர்.
இந்த மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோர் கலந்து கொள்ள வாய்ப்பு உள்ளதாகத் தெரிகிறது.
கடந்த மூன்று வருடங்களில் குஜராத்தில் காவல்துறை இயக்குநர்கள் மாநாடு நடக்கவுள்ளது இது இரண்டாவது தடவை என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

டிரம்ப் இல்லத்தில் துப்பாக்கியுடன் அத்துமீறி நுழைந்த இளைஞா் சுட்டுக் கொலை

இன்று வெற்றி யாருக்கு? தினப்பலன்கள்!

பெரம்பூரில் விஜய் போட்டியிட தவெக செயல்வீரா்கள் கூட்டத்தில் தீா்மானம்!

திமுகவின் தொகுதிப் பங்கீடுக் கணக்கு!
வீடியோக்கள்

Sunil Gavaskar அறிவுரையைக் கேட்பாரா Abhishek Sharma? | T20 World Cup Review
தினமணி வீடியோ செய்தி...

விரைவில் Dragon 2? PR கொடுத்த Update! | Cinema Updates | Dinamani Talkies
தினமணி வீடியோ செய்தி...

இந்திய அணிக்கு இதுதான் சரியான பிளேயிங் லெவன் | T20 World Cup Review
தினமணி வீடியோ செய்தி...

Abhishek Sharma-விடம் Gautam Gambhir என்ன பேசினார்? | T20 World Cup Review
தினமணி வீடியோ செய்தி...

